ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்காதே! – யூத அமைப்பு மிரட்டல்


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வற்புறுத்தலையும் மீறி இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதிச்செய்வதை தொடர முடிவெடுத்துள்ளது.இந்நிலையில் யூத அமைப்பு விடுத்துள்ள மிரட்டல் கடிதத்தில்,’மேற்காசியாவில் ஈரானை தவிர வேறு எந்த நாட்டிடம் இருந்தும் இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யலாம்’ என்று ஆலோசனை வழங்கியுள்ளது.இந்தியாவின் முடிவு அணுசக்தி திட்டத்திற்கு எதிராக ஈரானின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு தடையாக மாறும் என யூத அமைப்பான எ.ஜெ.சி கூறுகிறது.இந்தியாவின் முடிவில் ஆச்சரியமும், கவலையும் ஏற்பட்டுள்ளதாக எ.ஜெ.சியின் தலைவர் ராபர்ட் எல்மான், செயல் இயக்குநர் டேவிட் ஹாரிஸ் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து வர்த்தக குழு விரைவில் டெஹ்ரானுக்கு செல்லும் என்றும் வர்த்தக செயலாளர் ராகுல் குல்லரின் அறிக்கையை தொடர்ந்து இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.தங்களின் கவலையை உடனடியாக இந்திய அரசுக்கு தெரியப்படுத்தவேண்டும் என்றும், இதனைக்குறித்து நிருபமாராவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவ்வமைப்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.