அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி - இஸ்ரேலில் போர் பதட்டம்

மத்திய தரைக்கடலில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க 2 போர்க்கப்பல்களை ஈரான் நிறுத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலில் போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் அணு உற்பத்தியை பெறுக்குவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதம் தயாரிக்க அவற்றை பயன்படுத்து வதாக குற்றம் சாட்டுகின்றனர். அதை ஈரான் மறுத்துள்ளது. மின் உற்பத்தியை செய்யவே அணு உலைகள் பயன்படுத்த படுவதாக கூறி வருகிறது.

இருந்தாலும் ஈரான் மீது உள்ள அச்சத்தில் அமெரிக்கா தனது 2-வது போர்க்கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தனது 2 போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்தியுள்ளது. அவை சூயஸ் கால்வாயை கடந்து சென்றன.

இந்த தகவலை ஈரான் கப்பற்படை கமாண்டர் அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்துள்ளார். அனால் எதனை போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடலில் நிலை நிறுத்த பட்டுள்ளன என தெரிவிக்கவில்லை.

இஸ்லாமிய குடியரசு நாடுகளின் பாதுகாப்பு காகத்தான் ஈரானின் போர்க்கப்பல்கள்  மத்திய தரைக்கடலில்  நிறுத்த பட்டுள்ளன. அவை சமாதானம் மற்றும் நட்பு ஆகியவற்றை வலியுறுத்தவே அங்கு செல்கின்றன. போர் நடத்துவதற்காக அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரத்தில் இஸ்ரேலில் போர் பதட்டம் நிலவுகிறது. ஈரான் தனது அணு ஆயுதம் மூலம் தங்கள் நாட்டை தாக்க திட்டம் வைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ மந்திரி இகுட் பராக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என, ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சர்  இகுட்  பராக்கிடம் ஜப்பான் பிரதமர் நோடா  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related

இஸ்ரேலும், அமெரிக்காவும் சர்வதேச தீவிரவாதத்தின் சின்னங்கள்: ஈரான்

அமெரிக்காவும், இஸ்ரேலும் சர்வதேச தீவிரவாதத்தின் உண்மையான சின்னங்கள் என்று இண்டர்நேசனல் இஸ்லாமிக் அவேக்கனிங் கான்ஃப்ரன்ஸ் பொதுச்செயலாளர் அலி அக்பர் விலாயத்தி கூறியுள்ளார். ஈரானுக்கு எதிராக மனரீதியான...

துனிசியாவை உலுக்கிய இஸ்லாமிய இயக்கங்களின் பேரணி

புதிய அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டங்களாக அமைய வேண்டும் என கோரி துனீசியா பாராளுமன்றத்திற்கு முன்பு பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பான இஸ்லாமிக் ஃப்ர...

அமெரிக்கா நிர்பந்தம்: இந்தியா நிராகரிக்கும் – அஹ்மத் நஜாத்

இந்தியாவின் மீது அமெரிக்கா செலுத்திவரும் நிர்பந்தத்தை ஈரான் பொருட்படுத்தாது என்று அந்நாட்டின் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். இரு நாடுகள் இடையேயான உறவு கூடுதல் வலுப்பெறும் என்று நஜாத் தெரிவித்துள்ளா...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot NewsRecentArchive

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item