அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு-SDPI
http://koothanallurmuslims.blogspot.com/2011/11/sdpi.html
|
கேரளா மாநில தலைவர் நஸ்ருதீன், SDPI தேசிய செயலாளர் DR.ஆவாத் ஷெரிப் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பொது செயலாளர் S.நெல்லை முபாரக் |
கூடங்குளம் அணு உலை கூடத்தை மூடக்கோரி கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை கிராம மக்கள் தொடர்ந்து பல மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு SDPI தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. SDPI ன் மாநில தலைவர் K.K.S.M தெஹ்லான் பாகவி கடந்த மாதம் இடிந்தகரை கிராமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் உண்ணா விரத போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் .
|
SDPI தேசிய பொது செயலாளர் A. சயீத் உரை ஆற்றிய பொழுது |
கடந்த செப்டம்பர் அன்று கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகளை நிறுத்தக்கோரி SDPI ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்நிலையில் நேற்று (1-11-2011 அன்று ) தேசிய பொது செயலாளர் A. சயீத், தேசிய செயலாளர் Dr.ஆவாத் ஷெரிப், கேரளா மாநில தலைவர் நஸ்ருதீன், பொது செயலாளர் மனோஜ் குமார் தமிழ் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பொது செயலாளர் S.நெல்லை முபாரக் ஆகியோர் இடிந்த கரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் உண்ணா விரத போராட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தி கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
|
SDPI தேசிய செயலாளர் DR.ஆவாத் ஷெரிப் உரையாற்றிய பொழுது |
|
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழு தலைவருக்கு
தேசிய பொது செயலாளர் A. சயீத் அவர்கள் சால்வை அணிவித்த பொழுது
|