ராஜீவ் கொலையில் சுப்ரமணிய சாமிக்குப் பங்குண்டு - முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று, கொலைக்கு உதவியதாக, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை தீர்ப்பாகியுள்ளது. இந்நிலையில், இத்தூக்குக்கு எதிராக, தமிழகத்தில் பல அமைப்புகளும் குரல்கொடுத்துவருகின்றன.

இந்நிலையில், இப்படுகொலை வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றும், இப்படுகொலையில் அப்போதைய சட்ட அமைச்சர் சுப்ரமணிய சுவாமிக்கு உள்ள தொடர்பு, பங்களிப்புகள் குறித்து ஆராய வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் குழு ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது.

“தேச நலன் கருதி அவ்வாறு மறு விசாரணைக்கு உத்தரவிட்டால், பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவரலாம்" என்றும் அக்குழு தெரிவித்துள்ளது. அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்ரமணிய சுவாமிக்கு இதில் நிச்சயம் பங்குண்டு என்றும், இதுபற்றி தனது முன்னாள் எஜமானருடன் எந்த மேடையிலும் பேசத் தயார் என்று சுப்ரமணிய சாமியின் முன்னாள் தனிச்செயலர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலை மாற்றி, ராஜீவ்காந்தியை ஸ்ரீபெரும்புதூர் அழைத்துச் சென்றது யார்? வெர்மா ஆணையத்தின் அறிக்கையில் சுட்டப்பட்டிருந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து பேசப்படாதது ஏன்? ‘உளவுத்துறை(IB)யின் அப்போதைய இயக்குநர் எம்.கே.நாராயணின் நம்பகத்தன்மை குறித்து வெர்மா ஆணையம் கேள்வி எழுப்பியிருந்தது என்ன ஆனது?" என்று இத் தமிழுணர்வாளர் குழுமமான பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளரான திருமுருகன்.ஜி கேள்வி எழுப்பினார். அவருடன், சுவாமியின் முன்னாள் தனிச்செயலாளர் வேலுச்சாமி, ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.


ராஜீவ் காந்தியின் மரணம் தொடர்பாக திருச்சி வேலுச்சாமி குமுதம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில் இதுவரை வெளிவராத இரகசியங்கள் பலதை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தியைக் கொல்வதற்கு வெடிகுண்டு கட்டிச் சென்ற பெண் என்று கூறப்படும் தனுவின் நெற்றியில் உள்ள பொட்டை முக்கிய தடயமாக அவர் முன் வைத்தார்.

வெடிகுண்டு வெடிப்பதற்கு சுமார் 15 நிமிடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிவராசனுக்கு அருகில் மாலையுடன் நிற்கும் தனுவின் நெற்றியில் பொட்டு இல்லை.

வெடிகுண்டு வெடித்து சிதறிக்கிடக்கும் தனுவின் சிதறிய உடலின் நெற்றியில் பொட்டு காணப்படுகிறது. இரண்டு படங்களையும் அவர் பகிரங்கமாகக் காட்டினார். பின் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.

பொட்டு வைத்தபடி குண்டைக் காவிச்சென்ற தனுவின் நெற்றியில் இருந்த பொட்டு குண்டு வெடிப்பில் அழிந்துவிட்டதென்றால் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இறந்த பின்னர் அவருடைய நெற்றியில் பொட்டு வந்ததென்றால் அதில் என்ன நியாயம் இருக்கப்போகிறது..?

கொலையாளி ஒரு தமிழ் பெண்தான் என்று காட்டுவதற்காக அந்தப் பொட்டு அணிவிக்கப்பட்டதா..?

இல்லை சிதறிக் கிடக்கும் உடலம் தனுவின் உடலம் இல்லாமல் வேறொரு பெண்ணின் உடலமா..?

இல்லை புகைப்படம் எடுத்த பின் தனு பொட்டு வைத்தாரா..? அப்படி வைத்தால் அந்த நேரம் அவருக்கு எங்கிருந்து வந்தது பொட்டு..?

மேலும்… சம்பவம் நடைபெற்றபோது ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதை இன்றுவரை உள்துறை செயலராக இருந்த கே.ஆர்.நாராயணன் விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றும், இந்த வழக்கின் மர்மமே அதில்தான் புதைந்துள்ளதாகவும், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மேலும் பல கேள்விகளை அவர் எழுப்பினார்.

கேள்வி 01. அன்று ராஜீவ்காந்தி விசாரணைகளுக்கு பொறுப்பாக இருந்த ப.சிதம்பரம் அந்த விசாரணை அறிக்கைகள் முற்றாக தொலைந்துவிட்டதாகக் கூறினார்.. இது சரியா..?

கேள்வி 02. கம்யூனிஸ்டான தா. பாண்டியன் அந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர். அவர் ப.சிதம்பரத்திடம் இதுபற்றி கேட்டபோது மழுப்பலான பதிலையே கொடுத்துள்ளார் ஏன் மழுப்பினார்..?

கேள்வி 03. அரசியலை விட்டு முற்றாக ஒதுங்குவதாகக் கூறிய நரசிம்மராவ் ராஜிவ் இறந்ததும் எப்படி மறுபடியும் பிரதமரானார்..?

கேள்வி 04. கொலை நடைபெற்று விசாரணைகள் தொடங்கவில்லை அதற்குள் புலிகளே காரணம் என்று சுப்பிரமணியசாமி முடிவுகட்டி சொன்னது எப்படி..?

கேள்வி 05. சாதாரண பஞ்சாயத்து தலைவராகக்கூட இல்லாத சுப்பிரமணியசுவாமிக்கு இன்றுகூட பூனைப்படையின் பாதுகாவல் எதற்கு..?

கேள்வி 06. ராஜிவின் சொத்துக்களையும் அரசியல் பலத்தையும் அனுபவிக்கும் முக்கியமான நால்வர் இந்த விவகாரத்தில் தொடர் மௌனம் காப்பது எதற்கு..?

கேள்வி 07. இந்த விவகாரத்தின் முக்கியமான சந்தேக நபர்கள் எல்லாம் உயர்ந்த பட்டம், பதவிகளில் தொடர்ந்து நீடிப்பது எப்படி..?

கேள்வி 08. சந்திராசாமிதான் அன்றைய வெடிகுண்டு பெல்டை பூசை செய்து சிவராசனிடம் எடுத்துக் கொடுத்தார் என்ற விவகாரத்தை சொன்ன நபரை கார்த்திகேயன் ஏன் தாக்கி பற்களை உடைத்தார்?

கேள்வி 09. கார்த்திகேயன் புலிகளை மட்டும் குற்றவாளிகளாகக் காட்டுவதற்கு மேல் விசாரணைகளை முன் நகரவிடாது ஏன் தடுத்தார்..?

மேற்கண்ட ஒன்பது கேள்விகளும் மேலும் பல புதிய கேள்விகளுக்கு தூண்டுதலாக அமைகின்றன. நேற்று முன்தினம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டபோது பேரறிவாளன் உட்பட மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கலாம் என்ற முடிவை மு.கருணாநிதியே எடுத்தார்…என்றார். அப்படியானால் அந்த முடிவை அவர் எப்படி எடுத்தார். அவருக்கு பின்னால் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இருந்தாரா..?

கேள்வி 10. விடுதலைப்புலிகள் இதில் எப்படி மாட்டுப்பட்டார்கள்..? புதுமாத்தளன் இறுதி நேரத்திலாவது இந்த உண்மையை விடுவிக்காமல் அவர்கள் ஆடுகளத்தில் இறுகிய மௌனமாக இருநத்து ஏன்..?

கேள்வி 11. தென்னாசிய அரசியலில் என்ன நடக்கிறது.. என்ன நடந்தது.. ஈழத் தமிழர்கள் இதில் ஏன் பகடைக்காய்கள் ஆனார்கள்..?

Related

subramaniya swami 2081015121608938146

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item