காவல்துறையினர் காட்டும் பாகுபாட்டை ஆந்திர PFI கண்டிக்கிறது!

குர்னூல் மாவட்டம் நந்தியால் நகரில் ஆந்திர பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 4 ஆம் தேதி ஒன்று கூடியது. இதில் தற்போது ஆந்திர மாநிலத்தில் இயக்கத்தின் செயல் திட்டங்கள் குறித்தும், சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சார பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான சூழ்ச்சிகளை மத்திய மாநில அரசுகள், உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் கட்டவிழ்த்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

காவல்துறையிலும் உளவுத்துறையிலும் இருக்கக்கூடிய ஃபாசிஸ சிந்தனையுள்ளவர்களால் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான சதி வலைகள் பிண்ணப்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சியையும் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்காக அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சிகளில் கிடைக்கும் வெற்றியையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஃபாசிஸ சிந்தனை கொண்ட காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகளால் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அதிலும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு பேராதரவு இருக்கின்ற குர்னூல் மாவட்டத்தில் இத்தகைய சூழ்ச்சிகள் அதிக அளவில் நடந்து வருகிறது.

சமீபத்தில் குர்னூல் மாவட்ட அடோனியில் நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தின் போதும் முஸ்லிம்களே தாக்கப்பட்டார்கள், பின்னர் அவர்களையே குறிவைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறையினர் கலவரத்தை கட்டுப்படுத்துவது போன்று தங்களை காட்டிக்கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரான பி. காதர் பாஷா மற்றும் உறுப்பினரான முஹமது ஈஸா ஆகியோர காவல்துறையினர் கைது செய்தனர். எந்த ஒரு ஆதாரமும் இல்லாம இவர்கள் இருவரும் வகுப்புவாத வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்தது காவல்துறை. குர்னூல் மாவட்ட உயர் நிலை காவல்துறை அதிகாரி எம்.சிவ பிரசாத் கொடுத்த ஆணையின் பெயரில் காவல்துறையினர் பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் மீது சமூக நீதி மாநாடிற்கான சுவரொட்டிகள் ஒட்டியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அங்குள்ள சில தெலுங்கு பத்திரிக்கைகள் மட்டும் செய்தி வெளியிட்டு இயக்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சமூக நீதி மாநாட்டிற்கான பிரச்சாரத்தில் ஈடிபடுவதற்கு முறையாக சென்று பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரினால் எந்த காரணமுமின்றி அனுமதி தருவதற்கு மறுத்து வருகின்றனர். மேலும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இடமளித்த உரிமையாளர்களை நேரில் சென்று மிரட்டி கொடுத்த அனுமதியை திரும்ப்பப் பெற வலியுறுத்துகின்றனர். இதனை கண்டித்து ஜனநாயக உரிமையின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால் அதற்கும் காவல்துறை தடை விதித்து கைது செய்து வருகின்றனர்.

மாநாட்டிற்கான பிரச்சாரங்களை மாநிலம் முழுவதும் எவ்வாறு எடுத்துச்செல்வது என்பது பற்றிய முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. காங்கிரஸ் அரசாங்கம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு காவல்துறையின் இந்த அராஜக போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சிறுபான்மை மக்களையும், சிறுபான்மை மக்களுக்காக இயங்குகின்ற அமைப்புகளுக்கும் உரிய முறையில் பாதுகாப்பளிக்க வேண்டும். காவல்துறையிலும், உளவுத்துறையிலும் ஃபாசிஸ வெறியர்கள் நுழைந்துவிடாதாவாறு காத்துக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசை செயற்குழு கூட்டம் கேட்டுக்கொண்டதோடு, காவல்துறையின் இந்த பாகுபாட்டை வன்மையாக கண்டிக்கிறது.

தேசிய செயற்குழு உறுப்பினர் யாசிர் முன்னிலையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது தலைமை தாங்கினார். மற்ற செயற்குழு உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

(இது போன்ற அடக்குமுறைகளையும், ஆணவப்போக்கினையும் நாம் ஏற்கனவே எதிர்பார்த்தது தான், ஒவ்வொரு மாநிலங்களில் எதிர்கொள்ளப்படும் சவால்களே பாப்புலர் ஃப்ரண்டின் வெற்றியை அடையவைக்கிறது என்பதை இந்த மூடர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. ஏற்கனவே தேசிய பொதுச்செயலாளர் கூறியது போன்று பாப்புலர் ஃப்ரண்ட் இதை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்ளும்.)

Related

SDPI 6942654640874085633

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item