இறைத்தூதரை அவமதிக்க முயன்ற பிரஞ்சு பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்


முஹம்மது நபி (ஸல்) அவர்களை இந்த வார விருந்தினராக அழைத்து செய்தி வெளியிட்ட சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் தீ பிடித்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்களை இந்த வார விருந்தினராக அழைத்து செய்தி வெளியிட்ட சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கை தலைமை அலுவலகத்தில் தீ பிடித்து பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. இத்தீவிபத்து குறித்து பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளதாவது கடந்த செவ்வாய்யன்று இரவு சார்லி ஹெப்டோவில் அமைந்துள்ள பத்திரிக்கை அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை தீவிபத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை யாரேனும் இத்தீவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்று தெரியவில்லை.

மேலும் இத்தீவிபத்து குறித்து சாடிறிக் பிரெஞ்சு பத்திரிக்கையின் தலைவர் சார்ப் கூறியதாவது இத்தீவிபத்தால் தங்களுக்கு பெரிய பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் கணினியில் இருந்த பல தகவல்கள் அழிந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அப்பத்திரிக்கையில் வேலை செய்துவருபவர்கள் கூறியதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றி தவறான கருத்துக்களை தங்களது பத்திரிக்கையில் வெளியிட்டப்பின் ஷரியா ஹெப்டோ என்னும் பெயரில் தங்களுக்கு பல மிரட்டல்கள் வந்ததாகவும் தெரிவித்தனர்.

சாடிறிக் என்ற பிரெஞ்சு வாரப் பத்திரிக்கையின் சமீபத்திய பிரதியில் இஸ்லாமிய புரட்சிகளை கேலிசெய்தும் முன் அட்டையில் “சிரிப்பு மிகுதியால் நீங்கள் இறக்கவில்லை என்றால் 100 கசையடி” என்றும் செய்தி வெளியிட்டது.மேலும் “இஸ்லாம் கேலிக்குரிய மார்க்கம்” என்னும் வார்த்தைகளுடன் முஹம்மது (ஸல்) அவர்களை சிகப்பு மூக்கு வைத்த நபர் போன்று கேளிசித்திரமும் வரைந்து செய்தி வெளியிட்டது.

மேலும் இப்பத்திரிகை தனது சிறப்பு வெளியீட்டில் நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹலால் குடிப்புகள் பற்றியும் இலகுவான ஷரியத் பற்றியும் மேலும் பெண்கள் ஷரியத் சட்டங்கள் பற்றியும் தனது தலையங்கத்தில் கேலி செய்து செய்தி வெளியிட்டது.

அஹ்மத் தபி என்னும் பிரெஞ்சு முஸ்லிம் சமூக ஆர்வலர் இது பற்றி கூறியதாவது இந்த பத்திரிக்கையானது முஸ்லிம்களின் கோபத்தை தூண்டும் படியும் அவர்களின் சந்தோசத்தை கெடுக்கும் வகையிலும் செய்தி வெளியிட்டு வருவதாக கூறினார்.

மேலும் பத்திரிக்கைகளில் வரும் இது போன்ற செய்திகள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பின்பற்றப் பட்டு வரும் மார்க்கத்தைப் பற்றி தவறான பார்வைக்கு வழிவகுக்கும் என்று கூறினார். இது போன்ற செய்தியை கிறிஸ்துவர்களுக்கு எதிராக வெளியிட்டால் அவர்கள் புகார் அளிக்காமல் இருப்பார்களா? என்றும் வினவினார்.

இந்த பத்திரிக்கை வெளியிட்ட அட்டைப்படம் தற்போது ட்விட்டர் போன்ற சமூக வலைத்தடங்களில் பரப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

MOHAMED 1078513314586314893

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item