அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுகின்றன – ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம்

shahi-imamமுஸ்லிம்களின் மோசமான சூழ்நிலையை சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பிறகும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை ஏமாற்றுவது தொடர்கிறது என டெல்லி ஃபதேஹ்பூரி ஷாஹி இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் அஹ்மத் கூறியுள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாட்டையொட்டி நடைபெற்ற மில்லி கன்வென்சனை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது

சச்சார், ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கைகளை தற்பொழுதும் மேசைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வழிப்பாட்டு உரிமை கூட சவாலை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பலரும் முஸ்லிம்களின் பிரச்சனைகளை கேட்க கூட தயாரில்லை. முஸ்லிம்களை ஏமாற்றுவதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே போலவே உள்ளன.

சமூக நீதிக்கான அழைப்பு வெறும் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அதன் வரம்பிற்குள் வருவர். இத்தகையதொரு சமூகநீதிக்காகத்தான் நமது தேச தந்தை மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவுக்காக பாடுபட்டார். அதனால்தான் அவர் கலீஃபா உமரின் நீதியை விரும்பினார். சமூக்நீதி மாநாடு முஸ்லிம்களின் துயரநிலையை மாற்றுவதற்கான முக்கியத்துவம் வாய்ந்த துவக்கமாகும். இவ்வாறு ஃபதேஹ்பூர் ஷாஹி இமாம் கூறினார்.

Related

SJC 8501358955480296645

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item