திருப்பூர் வெள்ளம் - நிவாரணப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட்
http://koothanallurmuslims.blogspot.com/2011/11/blog-post_2255.html
திருப்பூர் மாவட்டத்தில் கடும் வெள்ள பெருக்கு சங்கிலி பள்ளம் ஓடை ,சம்மனை பள்ளம் ,நொய்யல் ஆறு போன்ற ஆறுகளில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கு காரணமாக ஊருக்குள் தண்ணிர் புகுந்து 14 க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது .இதுவரை 6 பேர் வரை இறந்ததாக சொல்ல படுகிறது.வெள்ள பெருக்கில் பாதிக்க பட்டவர்களுக்கு உதவி செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI நேரடியாக களத்தில் குதித்தது.பாதிக்க பட்ட வீடுகளில் அரசாங்கம் உதவியை எதிர்பார்க்காமல் தாமாக முன் வந்து பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் SDPI கள பணியாளர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர்.இந்த செயலை அங்குள்ள மக்கள் வெகுவாக பாராட்டினர்