மிஸ்டர் கலைஞரே! இப்போ உமக்கு வலிக்கிறதா?

அரசனாகட்டுமே!
அரசியாகட்டுமே!
குற்றங்கள் யார் செய்தாலும் தட்டிக்கேட்டுத் தடுப்பேன்!
தர்மத்தின் பக்கம் இருப்பேன்!


இது ஒரு திரைப்பட பாடல் வரியாக இருந்தாலும், இதைத்தான் பெரும்பாலான அரசியல்வாதிகள் தாங்கள் பதவி ஏற்கும் போதும் அந்த பதவிக்காக மக்களிடம் ஓட்டுப்பிச்சை கேட்கும் போதும் உபயோகப்படுத்தும் வார்த்தைகள்.  "நியாயம், நேர்மை, உழைப்பு, உண்மை தான் முக்கியம், சட்டத்திற்கு புரம்பாக யார் செயல்பட்டாலும் அது எனக்கு நெருங்கிய உறவினராக இருந்தாலும் அவர்களுக்கு சாதகமாக செயல்பட மாட்டேன்" என்றெல்லாம் அரசியல்வாதிகள் வாய்கிழிய பேசுவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதைப்பற்றி பேசுவதற்கு இப்போ என்ன இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஆம்! காரணம் இருக்கிறது. இதே பல்லவியை பாடித்தான் தமிழக முதல்வராக 5 முறை பதவி ஏற்றிருக்கிறார் கலைஞர் கருணாநிதி. இதை அவர் பின்பற்றவில்லை என்பதை நாம் அறிந்திருந்தாலும், தற்போது தனது மகள் கனிமொழி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறபோது என்னவோ நீதியே செத்துவிட்டது போன்று பேட்டிகளை கொடுத்து வருகிறார் கலைஞர்.

"கனிமொழிக்கு ஜாமீன் கிடையாது (கடல்லயே இல்லையாம்!) என்று வடிவேலு காமெடி ஸ்டைலில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறிவிட "நீதி தாமதிக்கப்படுவதால் மனதிற்கு நெருடலை ஏற்படுத்துகிறது!" என்று வசனம் பேசியுள்ளார் கலைஞர்.

"2ஜி" அப்படியென்றால் என்னவென்ற அறியாத மக்களுக்கு கூட "2ஜி ஸ்பெக்டர்ம் ஊழல்" பற்றி அறிந்துள்ளார்கள் இந்திய மக்கள். 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி (ஸாரி! நம்பரில் எழுத நமக்கு தெரியவில்லை) ரூபாய் ஊழல் நடைபெற்ற அலை ஒதுக்கீட்டில் மத்திய தொலை தொடர்பு மந்திரியாக இருந்த ஆர். ராசாவும் கலைஞரின் மகளான் கனிமொழியும் இன்று திகார் ஜெயிலில் அடைபட்டுக்கிடக்கிறார்கள். எத்தனை நாட்களாக? சில மாதங்களாகத்தான்.

கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்ற் செய்தி வந்ததும் அவரின் தாயார் அழுது கண்ணீர் வடித்தார்! மாற்றுக் கருத்து இல்லை, தாயாக இருந்ததினால் கண்ணீ வருவது இயல்புதான். தகப்பனாக இருப்பினும் தனது மகள் சிறைச்சாலையில் அடைப்பட்டு கிடக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கும்.
கனிமொழி கைது செய்யப்பட்டபோது கண்கலங்கிய அவரது தாயார்
ஆனால் நீங்கள் முதலமைச்சராக இருந்த போது கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார்களின் அழுகுரல்கள் உங்களது காதினில் ஏன் விழவில்லை? குற்றம் நிரூபிக்கப்படாமலேயே எத்துனை ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதோ?
கோவை மத்திய சிறையில் வாடும் முஸ்லிம்களின் குடும்பத்தார்கள்
கோவை குண்டுவெடிப்பில் குற்றவாளியாக ஆக்கப்பட்டு பல ஆண்டுகாலம் சிறையில் இருந்துவிட்டு பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட கோவை முஸ்லிம்கள்
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளின் போது கருணையின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் போது இந்த முறை எனது கணவர் விடுதலை செய்யப்படுவார்! இந்த முறை எனது மகன் விடுதலை அடைந்துவிடுவான்! இந்த முறை எனது அப்பா வீட்டிற்கு வந்துவிடுவார்! என்று ஒவ்வொரு முறையும் ஏக்கத்தோடு எதிர்பார்த்து ஏமாந்து போன குடும்பத்தார்கள் பட்ட மன வேதனை இப்போது புரிந்திருக்குமே!
தனது மகனின் விடுதலை எதிர்பார்க்கும் ஒரு தந்தை
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய இயக்கங்கள் கோவை சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்து ஆர்பாட்டங்கள் நடத்தினார்களே! அவற்றையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லையே! அது ஏன்?
கோவை சிறைவாசிகளின் விடுதலைக்காக போராட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (இடம்: கோவை)
பல ஆண்டுகள் அரசியில் வாழ்க்கை வாழ்ந்து கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு உணவு பிரச்சனை என்றால் என்ன? என்பதே உங்களுக்கு தெரியாது. ஆனால் அன்றாடம் கோவை சிறைவாசிகளின் குடும்பத்தார்கள் உணவுக்குக்கூட கஷ்டப்படுவது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை.

இளமையோடு சிறைக்குள் நுழைந்தவர்கள் முதுமை அடைந்த பிறகும் அவர்களை விடுவிக்க மனம் வராத உங்களுக்கு சில மாதங்கள் அதுவும் சிறைச்சாலையில் முதல் வகுப்பில் இருக்கும் உங்கள் மகளுக்காக ஏங்குகிறீர்களே!  உங்களுக்கொரு நியாயம்! மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

சமத்துவம், நீதி, நியாயம் போன்ற வார்த்தைகளெல்லாம் முஸ்லிம்களிடத்தில் ஓட்டு வாங்குவதற்காக மட்டுமே நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள்! இனியும் உங்களை இந்த சமுதாயம் நம்பிக்கொண்டிருக்கும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள்.

மக்களின் குறைகளை அறிந்து கொள்ள முடியாத நீங்கள் நிச்சயமாக ஒரு தலைவனும் அல்ல! கலைஞனும் அல்ல!

ஆக்கம்: முத்து

Related

TAMIL MUSLIM 3516640333617923197

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item