சங்க்பரிவார்கள் நடத்திய குண்டுவெடிப்புகள் சமூகங்களை பிளவுப்படுத்தியுள்ளது – சுரேஷ் கெய்ர்னார்
http://koothanallurmuslims.blogspot.com/2011/11/blog-post_27.html
சங்க்பரிவாரம் நடத்திய குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களை பாதுகாப்பு அற்றவர்களாகவும், பீதிவயப்படுபவர்களாகவும் மாற்றியது மட்டுமல்ல, சாதாரண ஹிந்து-முஸ்லிம் மக்களிடையே ஆபத்தான பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என அகில இந்திய தேசிய மதசார்பற்ற பேரவையின் தேசிய கன்வீனர் டாக்டர்.சுரேஷ் கெய்ர்னார் கூறியுள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் நடத்திவரும் சமூக நீதி மாநாட்டில் ’நீதிக்கான மக்களின் உரிமை’ என்ற கருத்தரங்கில் உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது: ‘அரசின் அனைத்து துறைகளும் முஸ்லிம்களுக்கு அநீதியை காட்டுகின்றன. கல்வி கற்ற மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி தகுதியே பெரும் தலைவலியாக மாறும் அளவிற்கு இந்தியாவின் புலனாய்வு ஏஜன்சிகள்
நடந்துகொள்கின்றன.
நடந்துகொள்கின்றன.
அஸிமானந்தா என்ற குற்றவாளி பல வருடங்களுக்கு பிறகு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அதனை கொண்டாட இங்கே ஆட்கள் உள்ளனர். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் இந்த உண்மைகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டனர். இந்தியாவில் நடந்த எந்த குண்டுவெடிப்பிலும் ஒரு முஸ்லிமுக்கும் பங்கில்லை.’ இவ்வாறு கெய்ர்னார் கூறினார்.