அப்பாவி முஸ்லிம்களை குறிவைக்கும் காவல்துறை - PFI கண்டனம்

நந்தித் I & II, மாலேகான் I & II, கான்பூர், அஜ்மீர், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், கோவா, சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ், தென்காசி என நாட்டில் நடந்த பல்வேறுகுண்டுவெடிப்புகளில் வெளிவந்த சங்பரிவார்களின் தொடர்பை மறைக்க, அதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சங்பரிவார பின்புலத்தோடு கடந்த சிலமாதங்களாக நடந்து கொண்டிருப்பதுதான் ஊழல் ஒழிப்பு நாடகம்.

இந்த போலியான ரத யாத்திரை தமிழகத்தில் மதுரை வந்து விட்டு செல்லும் போது திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டி என்ற கிராமத்தில் பாலத்தின்அடியில்ஒரு பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குண்டு வைக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படும் ஆலம்பட்டி கிராமத்திற்குச் சென்று குண்டை பார்த்தவுடன் இது ‘முஸ்லிம்கள் வைத்த குண்டு’ என்று கண்டுபிடித்துவிட்டதாம் காவல்துறை. இந்தியாவில் நடந்து வரும் நிகழ்வுகளைப் பொறுத்தவரை குண்டு வெடித்தவுடன் ஸ்பாட்டுக்குப் போகõமலேயே முஸ்லிம்கள்மீது பழி சுமத்தி விடுவார்கள்.

இங்கு முன்பாகவே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டதால் ஸ்பாட்டுக்குப் போய் முஸ்லிம்கள் தான் என்றுள்ளனர். இது ஒன்றுதான் தமிழக போலீசார் காட்டியவித்தியாசம். உடனே கேரளாவுக்குச் சென்றோம், அங்கு சென்றோம் என்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு ஏன் செல்லவில்லை என்பதுதெரியவில்லை.

27.10.2011 அன்று மதுரை வந்தார் அத்வானி. 28.08.2011 அன்று திருமங்கலம் வழியாக ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, கேரளா என பயணத்திட்டம்இருந்ததாக கூறும் காவல்துறை 26.10.2011 அன்று நள்ளிரவில்தான் போலீசாருக்கே அத்வானி பயணம் செய்யும் பாதை எது என தெரியும் என்றும்சொல்லுகின்றனர்.

அப்படியிருக்கும் போது ஒரே நாளில் இந்த திட்டத்தைத் தீட்டி செயல்படுத்தியவர்கள் யார் என்பது பற்றி போலீசார் விசாரித்ததாக தெரியவில்லை.

கடந்த காலங்களில் 24.01.2008 அன்று தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் அவர்களே குண்டு வைத்ததையும் குண்டு வெடித்த இடத்தில் தொப்பிகண்டெடுக்கப்பட்டதையும் அப்போது ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசு நேர்மையான விசாரணை நடத்தி உடனடியாக உண்மையை கண்டு பிடித்ததையும் நாம்நினைவிற் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இதனை முஸ்லிம்கள்தான் செய்தார்கள், இல்லையென்றாலும் முஸ்லிம்கள்தான் செய்ததாக காட்ட வேண்டும் என்ற முடிவுடன்தான் ஆரம்பம்முதலே செயல்பட்டது காவல்துறை. அன்று இரவு பத்திரிகையாளர்களிடமும் முஸ்லிம்கள்தான் இதனை செய்தார்கள் என்ற தொனியில்பேசியுள்ளதுகாவல்துறை. யாருடைய உத்தரவின் பெயரில் அப்படி செயல்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை.

சரியான கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது.

ஆனால், இறுதியில் எல்லா வழக்குகளிலும் வழக்கமாக சொல்வது போன்று செல்போனை வைத்து கண்டுபிடித்தோம் என்று இரண்டு முஸ்லிம் இளைஞர்களைகைது செய்துள்ளனர். மேலும் பலரை தேடி வருகின்றனர். இந்தியாவில் சமீப காலமாக நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் இதே போன்று செல்போன்ஆதாரம், இமெயில் ஆதாரம், எஸ்.எம்.எஸ். ஆதாரம் என்ற பெயரில் கைது செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களும் அப்பாவிகள், இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ்.ஐ சேர்ந்தவர்கள் என்பது ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களின் வாக்கு மூலங்களின் மூலமும் பல கைதுகள்மூலமும் நிரூபணமாகிவருவதை அனைவரும் அறிவோம்.
இச்சம்பவத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காக போராடி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை இவ்வழக்கில்சேர்த்து விடவேண்டும் என்ற அலாதியான ஆர்வம் அல்லது உத்தரவு போலீசாரிடையே காணப்பட்டது.

28.10.2011 அன்று ஸ்ரீவில்லிபுதூரில் ‘டீ’ குடித்துக்கொண்டிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினரான ஷாஜஹானை காவல்நிலையம் அழைத்துச் சென்று அன்றுவெள்ளிக் கிழமை தொழுகைக்கும் அனுமதியளிக்கõமல் மாலை வரை காவல் நிலையத்தில் வைத்து பின்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது என்று எழுதிஅவரிடம் கையெழுத்து வாங்கி விட்டுள்ளனர்.

பின்னர் 01.11.2011 அன்று நள்ளிரவில் பாப்புலர் ஃப்ரண்டின் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளரான சர்தார் மற்றும் நவாஸ் ஆகியோரை கைது செய்துசென்றுள்ளனர்.

கைது செய்து எங்கு வைத்திருக்கின்றார்கள் என்பதைக்கூட தெரியப்படுத்தாமல் மேலிடத்து உத்தரவு வரும் வரை நாங்கள் எதுவும் சொல்வதற்கு இல்லைஎன்றுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை துவங்கியவுடன் 02.11.2011 அன்று காலை 9.30 மணியளவில் அவர்களைவிடுவித்துள்ளனர்.

அத்வானி மதுரைக்கு வருகை தந்திருந்த போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஊழலில் ஊறித்திளைத்தவர்கள் ஊழலுக்கு எதிராக யாத்திரை நடத்துவதைகண்டித்து நோட்டீஸ் விநியோகம் செய்தது. அது காவல்துறைக்கும் தெரியும், அப்போதே அழைத்துப் பேசினார்கள். நோட்டீஸ் கொடுப்பது எங்களின் ஜனநாயகஉரிமை என்று சொல்லிவிட்டு வந்தோம்.

காவல்துறை இது போன்ற தகிடுதத்தங்களை செய்வார்கள் என்பதை அறிந்தே விநியோகிப்பட்ட நோட்டீசுடன் நாம் பத்திரிகையாளர்களுக்கு செய்தியும்கொடுத்தோம். ஆனாலும் காவல்துறை பாப்புலர் ஃப்ரண்ட்டை விடாமல் துரத்தி வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் சமீப காலமாக மத்திய அரசுக்கு வைத்து வரும்கோரிக்கைதான் இதற்கு காரணம். 1992ல் இருந்து இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் மீள்விசாரனை செய்ய வேண்டும், அந்த குண்டுவெடிப்புகள் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் அழுத்தமாக முன்வைத்து வருகின்றது. அதேபோன்று சமீபத்தில் நடந்த காவல்துறை அதிகாரிகளின் சந்திப்பில் நாட்டில் நடைபெற்ற 16 குண்டு வெடிப்புகளுக்கு பின்னணியில் இருப்பது இந்துத்துவ ஃபாசிஸபயங்கரவாதிகள்தான் என்ற மிகவும் ஆபத்தான அறிவிப்பு குறித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தன்னுடைய கவலையை பதிவு செய்தது.

நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் இருப்பது சங்பரிவார இந்துத்துவ ஃபாசிஸ சக்திகள்தான் என்பது மீண்டும், மீண்டும்வெளிச்சத்திற்கு வந்த பின்பும் மத்திய, மாநில அரசுகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் மெத்தனப் போக்கையும், அமைதியையும் கடைபிடித்துவருகின்றன. இனியாவது உளவுத்துறை நிறுனங்கள் இந்துத்துவ ஃபாசிஸ அமைப்புகளை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.

விசாரணை என்ற பெயரில் மீண்டும், மீண்டும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். விசாரணைஎன்ற பெயரில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட மாட்டார்கள் என்ற பிரதமரின் வாக்குறுதி உடனடியாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். என்றகோரிக்கையையும் முன்வைத்து வருகின்றது.

ஆக மொத்தத்தில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.விற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்ற விதத்திலும்,வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையும் மனதில் கொண்டு பா.ஜ.க.வின் மனதை குளிர வைக்கவும் ஆட்சிக்கு வந்த சில காலங்களிலேயே இத்தகையமுஸ்லிம் விரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது.

Related

TN POLICE 4426199014955638319

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item