SSLC: 497 மதிப்பெண்கள் பெற்ற அன்ஸலா பேகம்!

தமிழகத்தில் சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முதல் எஸ்.எஸ்.எல்.சி வகுப்புத்தேர்வில் 83.4 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே 4 பேர் முதலிடம் பிடித்தனர்.

தஞ்சாவூரைச் சார்ந்த ஸ்ரீநாத், சென்னையைச் சார்ந்த அன்ஸலா பேகம், ரம்யா ஸ்ரீஷா கோடா, மிதிஷா சுரானா ஆகியோர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

இவர்களில் தஞ்சாவூரைச் சார்ந்த ஸ்ரீநாத் தமிழமை முதல் பாடமாக தேர்வுச் செய்ததால் அவர் முதலிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டார். இதர 3 மாணவியரும் தமிழை முதல் பாடமாக தேர்வுச் செய்யவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் முதல் மதிப்பெண்களை பெற்றவர்களில் ஒருவரான அன்ஸலா பேகம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சேளனூரைச் சார்ந்தவர். பெரம்பூரில் இண்டக்ரல் கோச் பேக்டரியில் எலக்ட்ரிகல் எஞ்சீனியராக பணியாற்றும் அப்துல் ஹமீத் மற்றும் ஸைராபானு தம்பதியினர் இவரது பெற்றோர் ஆவர்.

அன்ஸலா, சென்னை முகப்பேறு டி.ஏ.வி மேல்நிலைப்பள்ளி மாணவி ஆவார். இவரது குடும்பம் கடந்த 30 ஆண்டுகளாக ஐ.சி.எஃபில் வசித்து வருகின்றனர். தான் டாக்டர் ஆக விரும்புவதாக அன்ஸலா தெரிவித்தார். அவரது ஒரே சகோதரனான குல்ஸார் அஹ்மத் முன்பு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் 2-வது இடத்தைப் பிடித்திருந்தார்.

மேலும் கோவை பாரதி மெட்ரிக் பள்ளியை சேர்ந்த மாணவர் மாணவர் முகமது இஜாஸ் 500-க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். கணித்தில் இவர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். அறிவியலிலும் 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

Related

சமுதாயம் 715507784269642874

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item