ஈரான் இப்பொழுது மிகவும் வலுவாக உள்ளது – காம்னஈ!

ஈரானின் புரட்சி நாயகர் ஆயத்துல்லாஹ் அலி கொமைனி மரணமடைந்து 23-வது நினைவு தின நிகழ்ச்சியில் உரையாற்றினார் அவர்.
அப்பொழுது அவர் கூறியது: ‘இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு கடந்த 33 ஆண்டுகளாக ஈரானை ஒழித்துக்கட்ட எதிரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டது, தேசம் வலுவடைந்துள்ளது என்பதன் சிறியது உதாரணமாகும்.
அணுசக்தி ஈரானை அஞ்சுவதை விட எதிரிகள் அஞ்சவேண்டியது இஸ்லாமிய ஈரான் ஆகும். ஈரானின் அணுசக்தி குறித்த குற்றச்சாட்டுகள் மேற்குலகின் பொய்களாகும். இதன் பெயரால் ஈரானை தாக்கினால் அது இஸ்ரேலுக்கு அழிவை உருவாக்கும்.’ இவ்வாறு காம்னஈ கூறினார்.