அப்துல் கலாமுக்கு RSS ஆதரவாம்!

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ் அப்துல் கலாமை ஆதரிக்கிறதாம். ஹரித்துவாரில் செய்தியாளர்களிடம் பேசிய R.S.S சர்சங்க் சாலக் (தலைவர்) மோகன் பாகவத் இதனை தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறியது: ‘குடியரசுத் தலைவராக அப்துல் கலாமை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது. அவர் இனிமையான மனிதர் என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்துவரும் மற்றவர்கள் அனைவருக்கும் அரசியல் பின்னணி உள்ளது. ஆனால், அப்துல் கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்.

நான் எனது கருத்தைத் தெரிவித்துள்ளேன். மக்கள் பிரதிநிதிகள்தான் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும்’ என்றார் மோகன் பகவத்.

பிரணாப் முகர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டணிக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து முடிவு அறிவிப்பதை பாஜக கூட்டணி தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், R.S.S தரப்பிலிருந்து அப்துல் கலாமுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று முன்னாள் குடியரசு தலைவரும், விஞ்ஞானியுமான A.P.J.அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தமது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தாம் போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கலாம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அப்துல் கலாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று கலாமிடம் 3 முறை தொலைபேசியில் பேசியிருந்தார். மமதா பானர்ஜியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் பாஜகவின் குல்கர்னி நேரில் சென்று கலாமை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என அப்துல் கலாம் அறிவித்துள்ளார்.

Related

இந்தியா 2801333937271557292

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item