எகிப்து பாராளுமன்ற கலைப்பிற்கு இஃவான்கள் எதிர்ப்பு

எகிப்து பாராளமன்றத்தை கலைக்கும் ராணுவத்தின் முடிவிற்கு இஹ்வானுல் முஸ்லிமீன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனைக்கான தீர்வு பொது வாக்கெடுப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

எகிப்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற பாராளமன்றத் தேர்தலில் முன்னிலை வகிக்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் இது பற்றி கடந்த சனிக்கிழமை தெரிவிக்கையில்; தற்போது எகிப்தின் ‘ஆபத்தான நாட்கள்’ நடைபெறுகிறது என்றும் இதனால் எகிப்தின் முன்னால் சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கிடம் இருந்து எகிப்து மக்களுக்கு கிடைத்த சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

மேலும் பொது வாக்கெடுப்பின் மூலமே பாராளமன்றம் கலைப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ராணுவ அரசின் இந்த முடிவு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் இஹ்வானுல் முஸ்லிமீன் கூறியுள்ளது.

மேலும் இஹ்வானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான சுதந்திரம் மற்றும் நீதி கட்சியோ ராணுவ அரசின் இந்த முடிவு எகிப்தின் அனைத்து அதிகாரத்தையும் ராணுவ அரசே வைத்துக்கொள்ள முயலுவதைக் காட்டுகிறது என்றும் இது மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளது.

எகிப்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இஹ்வானுல் முஸ்லிமீனின் வேட்பாளர் முஹம்மது முர்சி அவரை எதிர்த்து போட்டியிடுபவரும் ஹோஸ்னி முபாரக்கின் பதவிக் காலத்தில் பிரதமராக இருந்தவருமான அஹ்மத் ஷபீக்கை விட முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ராணுவத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து எகிப்து மக்கள் ராணுவத்தால் அமைக்கப்பட்ட தேர்தல் குழு ஷபீக்கை அதிபராக தேர்ந்தெடுக்க சூழ்ச்சி செய்கிறதோ என்று அச்சத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்கார்கள் முன்னாள் சர்வாதிகாரி முபாரக்கின் தலைமையில் இருந்த அனைத்து நபர்களையும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வெளியேற்றுமாறு நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எகிப்தின் தற்போதைய சூழல் அல்ஜீரியாவில் கடந்த 1992  ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தினைத் தொடர்ந்து தேர்தலில் இஸ்லாமிக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டு ராணுவம் அந்தத் தேர்தலை ரத்து செய்தது. அதேப்போன்ற சூழல் தற்போது எகிப்தில் நிலவுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Related

சமுதாயம் 4516877425073198353

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item