தீவிரவாத வேட்டை: சிதம்பரம் வீட்டிற்கு முன் தர்ணா மறுப்பு

தீவிரவாதத்தின் பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்கில் சிக்கவைக்கும் போலீஸ் நடவடிக்கையை கண்டித்து மனித உரிமை ஆர்வலர்கள் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு முன்னால் நடத்தவிருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. போராட்டம் நடத்த வந்தவர்களை 15 நிமிடத்திற்குள் போலீஸ் கைது செய்தது.

இரண்டு தினங்களுக்கு முன்பே போராட்டம் நடத்தப்போவதாக அறிக்கை வெளியானது. போராட்டத்தை தடுக்க ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு செல்லும் வழிகளை போலீஸ் மூடியது.

ஷப்னம் ஹாஸ்மி, நவைத் ஹாமித், மெஹ்தாப் ஆலம், தன்வீர் ஆலம், அமானத்துல்லாஹ் கான் உள்ளிட்ட மனித உரிமை ஆர்வலர்களின் தலைமையில் ஜோர்பாக் மெட்ரோ ஸ்டேசனில் இருந்து பேரணியாக ப.சிதம்பரத்தின் ஸப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டிற்கு சென்றனர். ஆனால் 15 நிமிடங்களுக்குள் 51 மனித உரிமை ஆர்வலர்களை சாணக்கியபுரி காவல் நிலையத்திற்கு போலீஸ் பலம் பிரயோகித்து அழைத்துச் சென்றது.

தகவலை அறிந்து சாணக்கியபுரி போலீஸ் நிலையத்திற்கு சென்ற மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கறிஞர் என்.டி.பாஞ்சோலி, லோக் ஜனசக்தி பொதுச்செயலாளர் அப்துல் கலீக்  சென்றபொழுது, கைது செய்யப்பட்டவர்கள் இங்கு இல்லை என்றும், அவர்கள் துக்ளக் சாலையில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் இருப்பதாகவும் போலீஸ் தவறான தகவலை கொடுத்தது.

போராட்டக்காரர்களுடன் பேசவேண்டும் என்று இருவரும் உறுதியாக தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களையும் போலீஸ் கைது செய்தது. போராட்டம் நடத்தியவர்களை தவிர ஹார்ஷ் டோபல், ஹிமான்ஷு குமார், ரமதான் சவுதரி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

எ.ஐ.எஸ்.எ, அமின் பிராதரி, எ.என்.ஹெச்.எ.டி, பாரதீய முஸ்லிம் மகிளா அந்தோலன், செண்டர் ஃபார் பாலிசி அனாலிசிஸ், சிட்டிசன் ஃபார் டெமோக்ரஸி, ஜாமிஆ டீச்சர்ஸ் அசோசியேசன், ஸய்யித் காஸ்மி சோலிடாரிட்டி கமிட்டி, மூவ்மெண்ட் ஃபார் எம்பவர்மெண்ட் ஆஃப் முஸ்லிம் இந்தியன்ஸ், என்.சி.டி.ஹெச்.ஆர், பி.யு.சி.எல் டெல்லி பிரிவு, ரெவலூசனரி யூத் அசோசியேசன், ஜெ.என்.யு.எஸ்.யு, நேசனல் கேம்பைன் எகைன்ஸ்ட் ஃபேப்ரிகேசன் ஆஃப் கெய்ஸஸ், சாம்ப- தி அமிய அண்ட் பி.ஜி.ராவ் ஃபவுண்டேசன் ஆகிய அமைப்புகளின் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

Related

சமுதாயம் 2265550078166532750

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item