ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் புதிய அமைப்பு!

ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளை கண்டிக்க முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் இந்து தலைவர்கள் சேர்ந்து தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பை சென்னையில் துவங்கியுள்ளனர். இவ்வமைப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எம்.இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் மூத்த தலைவர் ஹைதர் அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி தலைவர் எப்.ஏ.நாதன், தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவனந்தா உள்பட 11 இயக்கங்களைச் சார்ந்தோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அமைப்புக்கு சென்னை மயிலை பேராயர் ஏ.எம். சின்னப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்புக் குறித்து பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல்வேறு மதத் தலைவர்கள் அடங்கிய அமைப்பை துவங்கியுள்ளோம். இலங்கையில் போருக்குப் பின்னால் தமிழர்களின் பகுதிகள் மறுகட்டமைப்பு செய்யப்படும் என்ற அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் வாக்குறுதி நிறைவேற்றப்படவேயில்லை. மாறாக தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் தமிழர் பகுதிகளில் ராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வெளிநாடுகளின் உதவியோடு கட்டப்படும் வீடுகளைக் கூட சிங்களர்களுக்கு கொடுக்கிறார்கள். கடந்த 8 ஆண்டுகளில் 2,000க்கும் அதிகமான இந்து கோவில்கள், 300க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மஸ்ஜிதுகள் இடிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஐ.நா. சபையும், மத சுதந்திரத்தை பாதுக்காக்க நிறுவப்பட்ட ஆணையமும் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Related

சமுதாயம் 7973208304526115236

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item