அஹ்மத் நஜாத் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்?

ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் 2013- ஆம் ஆண்டுடன் தீவிர அரசியலில் இருந்து விலகப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்ச்சியாக 2 தடவை ஈரானின் அதிபராக பதவி வகிக்கும் அஹ்மத் நஜாத், ஜெர்மன் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் ஓய்வு பெறுவதுக் குறித்து குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடின் செய்தது போல 2017 அதிபர் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று நஜாத் தெரிவித்துள்ளார்.

2 தடவை அதிபராக பதவி வகித்த புடின், கடந்த மார்ச் மாதம் 3-வது தடவையாகவும் அதிபராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷ்யாவைப் போலவே தொடர்ச்சியாக 2 தடவைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை ஈரான் அரசியல் சாசனம் அனுமதிப்பதில்லை. ஆனால் புடின் 2 தடவை அதிபராக பதவி வகித்து விட்டு அடுத்த முறை தனது ஆதரவாளரை அதிபர் ஆக்கிவிட்டு தான் பிரதமர் பதவியை வகித்தார். பின்னர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதைப்போல தான் போட்டியிடமாட்டேன் என்று நஜாத் கூறியுள்ளார்.

புதிய அரசியல் கட்சியை உருவாக்குவீர்களா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவித்த நஜாத், அதிபராவதற்கு முன்பு தான் வேலைப்பார்த்த துறைக்கே திரும்பச் செல்வதாக கூறினார்.

Related

சமுதாயம் 7407153456353629721

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item