NWF-ன் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை மீட்பதற்கான போராட்டம்








கடந்த ஆட்சியில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விஷயத்தில் அரசு அதிகாரிகளின் ஒருசார்பு தன்மை, உளவுத்துறை அதிகாரிகளின் முஸ்லிம் விரோதப்போக்கு, கருணையில் கூட அரசின் அப்பட்டமான பாரபட்சம் ஆகியவற்றால் முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது.

மேலும், விசாரணை சிறைவாசிகளாக இருந்தபோது ஜாமீன் கூட மறுக்கப்பட்டு நீண்ட நெடும் சிறைவாசத்தை அப்போதே தண்டனையாக அனுபவித்து விட்டு அவர்கள் தண்டனைக்கைதிகளாக இப்போதும் சிறையில் வாடி வருகின்றனர். பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 200க்கு மேற்பட்டவர்களில் ஒருவர் கூட மத ரீதியாக குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கோ, தண்டனைகளோ சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொதுமன்னிப்பில் சிறைக்கைதிகளை விடுதலை செய்வது என்பது தற்போதைய அ.தி.மு.க. அரசின் கொள்கைக்கு விரோதமானதல்ல என்பதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

அரசின் பொது மன்னிப்பு என்பது முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாது மற்ற சிறைவாசிகளுக்கும் கிடைத்திட வேண்டும். ஆகவே விடுதலைக்குத் தகுதியுள்ள அனைத்து சமூகங்களை சேர்ந்த ஆயுள் சிறைவாசிகளையும் கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், முஸ்லிம் சிறைவாசிகளின் அவலம் நீங்கிட வேண்டுமெனில் அரசு வழங்கிடும் விடுதலை ஒன்றே தீர்வு என்ற நிலையில் 7 ஆண்டுகள் கழிந்த 49 முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்திடுமாறு பாதிக்கப்பட்ட பெண் சமூகத்தின் சார்பாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் (NWF) இந்த மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கின்றது.

இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் மேலப்பாளையம் V.S.T.பள்ளிவாசலில் இருந்து பேரணியாக தொடங்கி ஆஸாத் வீதி வழியக பஜார் திடலில் நிறைவடைந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த பேரணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.கைசர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டதிற்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் N.ஜன்னத் ஆலிமா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட தலைவர் M. மும்தாஜ் ஆலிமா வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் S.பாத்திமா கனி, தூய சவேரியர் கல்லூரியின் உதவி பேராசிரியர் P.சாந்தி ஆகியோர் கோரிக்கையுரையற்றினார். இறுதியாக நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் நெல்லை மாவட்ட செயலாளர் நஸ்ரத் நன்றியுரையற்றினார். இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர்கள், நீதியாளர்கள், முஸ்லிம் பெண்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் 1000 மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்

Related

இயக்கங்கள் 5107530863246804901

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item