முர்ஸியின் வெற்றி: காஸாவில் தக்பீர் முழக்கம்!

இஃவானுல் முஸ்லிமீனின் முஹம்மது முர்ஸி எகிப்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காஸ்ஸாவில் முஸ்லிம்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

கார்கள், வீடுகள் மீது முர்ஸியின் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. வீதிகளில் இறங்கி அவர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் தக்பீர் முழங்கியும், பாட்டுப்பாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளீப்படுத்தினர்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு அருளாக அமைந்த புரட்சியின் பிரதிநிதிகளான எகிப்தியர்களுக்கும், முஹம்மது முர்ஸிக்காகவும் ஃபலஸ்தீன் மஸ்ஜிதுகளில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஃபலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யாவும் மக்களுடன் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர் முஹம்மது முர்ஸி மற்றும் இஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீவுடன் பேசினார்.

ஃபலஸ்தீன் மக்கள் எகிப்தை மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.

Related

சமுதாயம் 7902723806312287225

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item