சென்னையில் SDPI நடத்திய இரயில் மறியல் போராட்டம்

பெட்ரோல் உயர்வை கண்டித்தும் அதனை உடனே திரும்பபெற வலியுறுத்தியும் வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ சார்பாக் நேற்றைய தினம் 31.05.2012 அன்று சென்னையில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணைய் நிறுவனங்களில் கிடுபிடியால் மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு லிட்டருக்கு 7.53ரூபாய் வீதம் உயர்த்தியது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்றனர். இதனை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பட்டவர்களால் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில் வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐயின் சார்பாக நேற்றைய தினம் காலை 11மணியளவில் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் முன்பு "இரயில் முற்றுகை போராட்டம்" நடைபெற்றது. வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா தலைமை தாங்கினார்.

அரசு பொதுமருத்துவமனையிலிருந்து ஊர்வலமாக இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். ஏற்கனவே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து கொண்டித்தோப்பு மண்டபம் ஒன்றில் தங்கவைத்தனர். பின்னர் மாலை 5 மணியளவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.



 




Related

இயக்கங்கள் 1102726811216202889

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item