பயாஸ் உஸ்மானியின் மரணம்:சுதந்திர விசாரணை தேவை- PFI

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக போலீஸ் விசாரணையின் போது கொல்லப்பட்ட பயாஸ் உஸ்மானியின் மரணத்தில் சுதந்திர விசாரணை நடத்த வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

உஸ்மானியின் மரணத்தில் கடுமையான மனித உரிமை மீறல் நடந்துள்ளது. பொது சமூகம் இதனை கடுமையாக கண்டிக்க வேண்டும். பயாஸ் உஸ்மானியின் மர்மமான முறையிலான மரணத்தை குறித்த கேள்விகளிலிருந்து தப்புவதற்கு குண்டு வெடிப்பிற்கு எதிரான மக்கள் உணர்ச்சியை போலீஸ் உபயோகிக்கிறது என பாப்புலர் ப்ரண்ட் குற்றம் சாட்டியுள்ளது. ஊடகங்களும், பொது சமூகமும் இச்சம்பவத்தை எளிதாக எடுத்துக் கொண்டது துரதிர்ஷ்டவசமானதாகும்.

பயாஸ் உஸ்மானியின் மரணத்தை ஒரு பயங்கரவாதியின் மரணம் போல சித்தரிக்கப்பட்டது.  போலீஸாரின் வரம்புமீறிய சித்திரவதையின் காரணமாகவே பயாஸ் உஸ்மானி மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டில் சித்திரவதையின் காரணமாக ஏராளமான மரணங்கள் நிகழ்ந்த பிறகும் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள அரசு தயங்குவது தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.

இச்சம்பவத்திற்கு அரசு மிக முக்கியத்துவம் அளித்து இம்மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

Related

SDPI 4992121887082380562

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item