காவி வெறியர்களின் சுயரூபம்

பல நூறு வருடங்களுக்கு முன்பாக முகாலாய மன்னர்கள் இந்திய நாட்டை ஆட்சி செய்து வந்தனர். வரலாற்று குறிப்பின் படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை முகாலாய மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். 

பல்வேறு மதங்களை பின்பற்றிய இந்திய மக்களின்ட "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தாரக மந்திரம் பேச்சளவில் மட்டுமல்லாது செயல் அளவிலும் இருந்து வந்தது. எல்லா மக்களுக்கும் சுதந்திரமும், நீதியும், பாதுகாப்பும் கிடைத்து வந்தது. முகாலாய மன்னர் பாபர் முதற்கொண்டு ஒளரங்கஜிப் வரை அனைவருமே சிறப்பானதொரு ஆட்சியை இந்த மண்ணில் செலுத்தியுள்ளனர்,ஒரு சிலரைத் தவிற.


அன்றைய காலங்களில் எந்த ஒரு மதக்கலவரங்களோ அல்லது பொது இடங்களில் குண்டு வெடிப்புகள் போன்ற அசம்பாவித சம்பவங்களோ நிகழ்ந்ததாக சரித்திரமே இல்லை.அப்போதிருந்த இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஒரு சிறப்பானதாகும். மத பாகுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் நாட்டின் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டனர்.
முகாலாய மன்னர்களின் ஆட்சிக்கு பின்னர் இந்த நாட்டிற்கு வியாபார நோக்கத்திற்காக வந்து இந்த நாட்டை சுரண்டி ஆட்சி செய்து வந்த வெள்ளையர்களை எதிர்த்து எல்லா மக்களும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்ட யுக்தி வெள்ளையர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் கையாண்ட ஒரு தந்திரம் தான் "DIVIDE & RULE" பிரித்தாளும் தந்திரம். ஏதாவது ஒரு பொய்யான வரலாற்றை மக்களிடம் பரவச்செய்து இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள ஒற்றுமையை சீர்குழைத்து அவர்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலம் தங்களது ஆதிகத்தை ஏற்படுத்தினர் வெள்ளையர்கள். அவ்வாறு அவர்கள் ஏற்படுத்திய பொய்யான வரலாறுகளில் ஒன்றுதான் பாபர் ராமர் கோயிலை இடித்து விட்டு மஸ்ஜித் கட்டினார் என்று.

 

இந்த பிளவை சரியாக பயன்படுத்திக்கொண்ட ஆரிய பார்பன ஜாதியர்கள் தங்களுடைய ஆரிய தர்மத்தை பர்ப்புவதற்காக எரிகின்ற தீயில் எண்ணை ஊற்றிய கதையாக முஸ்லிம்கள் மீது இஸ்லாத்தின் மீது வெறுப்பை கக்கினார்கள். காரணம் தங்களது முந்தய கொள்கையான் வர்ணாசிரமக் கொள்கையை இஸ்லாம் உடைத்தெரிவதாலும், தங்களது தீண்டாமைக்கொள்கையை குழிதோண்டு புதைப்பதாலும் தான் இந்த வெறுப்பே. இந்த ஆரிய பார்பனர்களின் இன்றைய பரிணாம வளர்ச்சி தான் தற்போது ஃபாஸிச தீவிரவாத அமைப்பாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனோடு தொடர்புடை அமைப்புகள்.

இவர்கள் இன்றும் முஸ்லிம்களை கருவருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் தேசத்தின் விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக எல்லா சதிவேலைகளையும் செய்து வருகிறார்கள். இந்த நாட்டிலே நடைபெற்று வரும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் இவர்களே காரணம்.


இவர்களுடைய வேலையே முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதுதான்.
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று கஷ்மீரீல் தேசியக்கொடியை ஏற்றப்போவதாக இவர்கள் நடத்திய நாடகம். என்னடா இது? தேசியக்கொடியை ஏற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று எண்ணுகிறீர்களா? தேசியக்கொடியை ஏற்றுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் இவர்களுக்கும் இந்திய தேசியக்கொடிக்கும் என்ன சம்பந்தம்? உண்மையில் இவர்கள் தேசப்பற்றோடு தான் தேசியக்கொடியை ஏற்ற எண்ணிணார்களா? என்று பார்க்கலாம்.

ஆர்.எஸ்.எஸ்ன் ஆதாரபூர்வ பத்திரிக்கையில் ஜூலை 17, 1947 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், இந்திய தேசியக்கொடி மூவர்ணத்தில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் மூவர்ணக்கொடிக்கு பதிலாக காவிக்கொடியை தேசியக்கொடியாக ஆக்கலாம் என்று கூறியுள்ளனர்.



ஜூலை 2008ல் கஷ்மீரில் உள்ள மஸ்ஜிதே அக்னூர் மினாராவில் தேசியக்கொடியை கட்டும் வி.ஹெச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள்

இந்த ஆர்.எஸ். எஸ் கயவர்கள் ஒருபோதும் நமது மூவர்ணக்கொடியை மதித்ததும் இல்லை, ஏற்றுக்கொண்டதும் இல்லை. டெல்லி செங்கோட்டையில் காவிக்கொடியை ஏற்றப்போவதாகவும் அவர்களது பத்திரிக்கைகளில் பிரசுரித்தனர்.""தற்போது ஆட்சியை பிடிட்திருக்கும் ஆட்சியாளர்கள் எங்களது கைகளில் இந்த மூவர்ணக்கொடியை கொடுத்துள்ளார்கள். ஆனால் இந்த மூவர்ணக்கொடியை ஒரு போதும் ஹிந்துக்கள் தங்களது தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மூவர்ணக்கொடியை தேசியக்கொடியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இவ்வாறு குறிப்பிட்டனர், அதாவது "மூன்று" என்ற வார்த்தையே சாத்தான் ஆகும். அப்படி இருக்க தேசியக்கொடியின் மூவர்ணம் இருப்பது நாட்டிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று கூறியுள்ளனர்.



1946 ஜூலை 14ல் நிகழ்ச்சி ஒன்றில்  ஆர்.எஸ்.எஸ்ன் இரண்டாவது குருஜி என்றழைக்கப்படும் கோல்வால்கர் கூறும்போது, இந்த தேசத்தின் கலாச்சாரத்தை காவிக்கொடிதான் வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது கடவுள் வாழும் உதாரணமே காவிகொடிதான். நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கின்றோம். ஒரு நாள் இந்த தேசம் முழுவது காவிக்கொடிக்கு முன்பு வணக்கம் செலுத்தும் எனக் கூறியுள்ளார்.



இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்பு கூட ஆர்.எஸ்.எஸ் கயவர்கள் தேசியக்கொடியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் கோல்வால்கர் எழுதிய புத்தகங்கள்தான் அதன் உறுப்பினர்களுக்கு வேதங்கள். கோல்வால்கர் தனது புத்தகம் ஒன்றில் எதற்காக நமது தேசத்திற்கென்று புதிய கொடியை ஏற்படுத்த வேண்டும்? நமக்கென்று காவிகொடி இருக்க இந்த மூவர்ணக்கொடி எதற்கு? என்று எழுதியுள்ளார்.


ஆர்.எஸ்.எஸ் இன்றுவரை தங்களது நிகழ்ச்சிகளில் தேசியக்கொடியை ஏற்றியதில்லை. நாக்பூரில் அவர்களது தலைமை அலுவலகத்தில் கூட தேசியக்கொடியை ஏற்றியதில்லை. மேலும் அவர்கள் நடத்தும் அணிவகுப்பில் கூட தேசியக்கொடியை ஏந்தியதில்லை. இவர்கள் எங்கையும், எந்த நிகழ்ச்சிகளிலும் தேசியக்கொடியை ஏந்தியதில்லை மாறாக காவிக்கொடியையே ஏந்தியுள்ளனர். தேசியக்கொடியை ஏற்றப்போகிறோம் என்று இவர்கள் கூறுவதெல்லாம் முஸ்லிம்களின் மீதுள்ள வெற்ப்ப பரப்புவதற்கே அன்றி வேறில்லை.


இப்படி ஒரு கேடுகெட்ட வரலாற்றிற்கு சொந்தக்காரர்களாக விளங்கும் இந்த ஃபாஸிஸ்டுகள் முஸ்லிம்கள் தேசியக்கொடி ஏந்தி சுதந்திர தின விழா கொண்டாடும் போது, நிச்சயம் அவர்களுடை குள்ள நரித்தனம் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே தங்களை தேசத்தின் பாதுகாவலர்கள் போல் காட்டிக்கொள்ள முயல்கின்றனர் இந்த ஃபாஸிஸ்டுகள்.

Related

pfi 1139531709497987357

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item