முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் சுப்ரமணியம் சுவாமிக்கு ISI-யுடன் தொடர்பா?

அமெரிக்க கைக்கூலியாகவும், அரசியல் கோமாளியாகவும் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுப்ரமணியம் சுவாமி தற்பொழுது தீவிர வலதுசாரி ஹிந்துத்துவா பயங்கரவாத ஆதரவாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ISI ஏஜண்ட் என அமெரிக்காவில் FBI கைதுச்செய்த நபருடன் சுப்ரமணியம் சுவாமி நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டது விவாதத்தை கிளப்பியுள்ளது.

கஷ்மீர் சுதந்திரத்திற்காக பாடுபட ISI அளித்த பணத்துடன் கைதுச் செய்யப்பட்டதாக கூறப்படும் டாக்டர்.குலாம் நபி ஃபாய் உடன் கஷ்மீர் தொடர்பாக ஏற்பாடுச் செய்யப்பட்ட கருத்தரங்கில் சுப்ரமணியம் சுவாமி கலந்துக்கொண்டுள்ளார்.

2003-ஆம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க செனட் கட்டிடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய சுப்ரமணிய சுவாமி கஷ்மீரைக் குறித்து உரை நிகழ்த்தினார். குலாம் நபி ஃபாயியின் தலைமையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கஷ்மீர் அமெரிக்க கவுன்சில்தான் கருத்தரங்கை ஏற்பாடுச்செய்தது. ஆனால் ISI ஏஜண்ட் என தெரியாமல் கருத்தரங்கில் கலந்துக் கொண்டதாக சமாளிக்கிறார் கோமாளி சுவாமி. இந்நிகழ்ச்சியைக் குறித்து இந்திய தூதரகத்தில் விசாரணைச் செய்தபோது இந்தியாவிற்கு எதிரான அமைப்பு என பதில் கிடைத்ததாகவும், ஆனால் ISI தொடர்பு கிடையாது என தெரிவித்ததாகவும் சுவாமி கூறுகிறார்.

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்களுக்கு எதிராக துவேஷத்தை பரப்பும் வகையில் அரசியல் புகலிடம் இல்லாமல் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளிடம் தஞ்சம் அடைந்துள்ள சுப்ரமணியம் சுவாமி எழுதிய கட்டுரை பெரும் விவாதத்தை கிளப்பிய வேளையில் ISI நடத்திய நிகழ்ச்சியில்  கலந்துக்கொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

சுப்ரமணியம் சுவாமி முஸ்லிம்களுக்கு எதிராக துவேசமான கட்டுரையில், சில ஆண்டுகளில் தாலிபான் பாகிஸ்தானை தனது ஆளுகைக்கு கொண்டுவருமாம். பின்னர் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முஸ்லிம்கள் முயல்வார்கள் என எழுதியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சட்டத்தையும், சட்டத்தையும் மீறி ஹிந்துக்கள் இதற்கு எதிராக ஒன்றிணைய முன்வர வேண்டுமாம். முஸ்லிம்களின் நோக்கம் ஹிந்துக்களை கொல்வதும், கோயில்களை தகர்ப்பதும்தான். இந்தியா ஹிந்து நாடு என அங்கீகரிக்கும் முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்தியாவில் வாழ முடியும்- என தொடர்கிறது அரசியல் அனாதையாகி ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் அனுதாபத்தை பெற துடிக்கும் சுப்ரமணிய சுவாமியின் கட்டுரை.

இக்கட்டுரையின் பெயரில் சுப்ரமணிய சுவாமியின் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாக மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கூறியிருந்தது.

Related

subramaniya swami 3357512594570168102

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item