இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு
http://koothanallurmuslims.blogspot.com/2011/07/blog-post_24.html
கூத்தாநல்லூர்-ல் சீமான் ( SIMAN - Sharjah Islamic Madarasa Association ) அமைப்பு நடத்திய இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு அல்லாஹ்வின் நற்கிருபையால் இனிதே நடைபெற்றது.
கூத்தாநல்லூர் ஈத்காஹ் மைதானத்தில் மிக பிரமாண்ட மேடையில் அல்ஹாஜ் T.M.பகுருதீன் அவர்களின் தலைமையில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. M.R.E. அப்துல் ரஹ்மான் ( இணைசெயலாளர், சீமான் ) அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். Av.M. ஜாபர் தீன், N.M.A. சிகாபுதீன், J.M.A.ஷேக் அப்துல் காதர், T.M.தமிஜு தீன், A.P.N.அப்துல் ரவூப், L.M.அஸ்ரப் போன்ற கூத்தாநல்லூர் தலைவர்கள் முன்னிலையில் சீமானின் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது.
கம்பம் பீர் முஹம்மது அவர்கள் "குழந்தை வளர்ப்பில் பெண்களின் பங்கு" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். சீமானின் சிறப்பு மலரை சென்னை உயர்நீதி மன்றம், நீதிபதி G.M.அக்பர் அலி அவர்கள் வெளியிட்டார், அதை M. ஷாகுல் ஹமீது ( MD , Nobel Group of Companies, Abudhabi ) அவர்கள் பெற்றுகொண்டார். பெண்கள் விழிப்புணர்வு பாடல்களை சீமானின் தீன்இசைவேந்தர் A.S. தாஜுதீன் பாடினார். ஷரியத் பாதுகாப்பில் பெண்கள் என்ற தலைப்பில் A.S. பாத்திமா முஸபர் சிறப்புரை ஆற்றினார். முஹம்மத் மாலிக் நன்றியுரை ஆற்றினார். கல்வி உதவி தொகையை ஏழை மாணவ மாணவியருக்கு சீமான் அமைப்பினர் வழங்கினார்கள். மாநட்டில் கலந்துகொண்ட 2000 பேருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளி ஊரில் இருந்து வந்த மக்களுக்காக வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவினை சிறப்பாக நடத்தி கொடுத்த கூத்தாநல்லூர் எமிரேட்ஸ் ஆர்கனைசேஷன் ( KEO ) மற்றும் கூத்தாநல்லூர் இஸ்லாமிய இளைஞர்களையும் சீமான் அமைப்பினர் பாராட்டினார்கள். மாநாடு 10 :30 மணியளவில் நிறைவடைந்தது.