மும்பை குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது-திக் விஜய்சிங் பரபரப்பு பேட்டி

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் திக்விஜய்சிங் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:எதனையும் தகுதியற்றது என தள்ளுபடிச் செய்து விடமுடியாது. அவற்றை குறித்தெல்லாம் புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தவேண்டும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்து ஆதாரங்களை புலனாய்வு ஏஜன்சிகள் கேட்டால் நான் அளிக்க தயாராக உள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் இந்த குண்டுவெடிப்பைக் குறித்து அல்ல. எதற்கான வாய்ப்பையும் நிராகரித்துவிடமுடியாது என நான் கூறியது இதனால்தான் என திக்விஜய்சிங் கூறியுள்ளார்.

Related

RSS 3189367987532121415

Post a Comment

  1. inththiyaavil irukkum media islaamiyanai mattum kuri vaiththu thaakkukirathu thavaru seivathu yaaraaka irunththaalum thandikka veendum

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item