நெல்லையின் வீதிகளில் நீதியின் போராளிகள்
http://koothanallurmuslims.blogspot.com/2011/07/blog-post_02.html
தமிழக முஸ்லிம்கள் மிக ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சி "சுதந்திர தின அணிவகுப்பு" இந்த வருடம் திருநெல்வேலியில் நடக்க இருப்பதாக ஏற்கனவே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு முடிவு செய்து செய்தி வெளியிட்டிருந்தது.
இந்திய முஸ்லிம்களின் சுதந்திர போராட்ட வரலாறுகள் பல சூழ்ச்சிகளின் அடிப்படையில் மறைக்கப்பட்டு, பாட புத்தகங்களிலும் வரலாற்று நூல்களிலும் முஸ்லிம்களுக்கும், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம்கள் அனைவரும் தேச விரோதிகள் அவர்கள் இந்தியாவில் வசிப்பதற்கு தகுதியில்லை என்ற அடிப்படையில் ஃபாஸிஸ்டுகளும், அரசாங்கமும் செயல்பட்டு பட்டு வந்த வேலையில், இந்த பொய்யான பிரச்சாரங்களை உடைத்தெரியும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்த ஒரு மிகச்சரியான நிகழ்ச்சி தான் ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று நடத்தப்படும் "சுதந்திர தின அணிவகுப்பாகும்".
"மைசூர் வேங்கை" ஷஹீத் திப்புசுல்தானின் வாரிசுகள் நாங்கள்! வெள்ளையனை எதிர்த்து போரிட்ட மருதநாயகத்தின் வம்சாவளிகள் நாங்கள்! தீண்டாமை இல்லாத, ஊழல் இல்லாத, வகுப்புவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும். பசியிலிருந்தும் பயத்திலிருந்தும் மக்கள் பாதுகாப்புப்பெறவேண்டும். இந்திய நாட்டை துண்டாட நினைக்கும் குள்ள நரியான ஃபாஸிசத்தை வேறோடு எடுத்து எரியவேண்டும், அந்நிய சக்திகளிடம் இருந்து இந்த நாட்டை பாதுகாக்க மீண்டும். ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்ற கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த இருக்கிறது இன்ஷா அல்லாஹ்!
இந்த அற்புத நிகழ்ச்சியை முதன் முதலாக தமிழகத்தில் நடத்த முற்பட்டபோது, அல்லாஹு அக்பர்! எத்தனை தடைகள், எத்துனை பிரச்சனைகள். அல்லாஹ்வின் உதவியோடு கடந்த 2008ஆம் ஆண்டு மதுரையில் நடத்திய போது தமிழகமே பாப்புலர் ஃப்ரண்டை திரும்பி பார்த்தது.
எதிரிகளுக்கு கடும் அதிர்ச்சி, அதே போன்று முஸ்லிம்களுக்கோ அது ஓர் இன்ப அதிர்ச்சியளித்தது. காரணம் இப்படியும் ஒரு உணர்வுப்பூர்வமான நிகழ்ச்சியை முஸ்லிம்களால் நடத்த முடிந்திருக்கிறதே என்பது தான்...
அவர்களின் ஆனந்தக்கண்ணீரும், அவர்கள் இறைவனிடம் மன்றாடிக்கேட்ட துஆவை அல்லாஹ் நிறைவேற்றினான். அல்லாஹ்வுடைய மிகப்பெரும் கிருபையினால் வருகின்ற ஆகஸ்ட் -15 தேதி நெல்லை மாவட்டதின் வீதிகளில் "போர் பரணி எழுப்பி! வீர முரசு கொட்டி! மிடுக்கான உடை அணிந்து வர இருக்கிறார்கள், நீதியின் போராளிகள்! சுதந்திரத்தின் காவலாளிகள்! " ஆம்! நிச்சயம் நீதி கிடைத்தே தீரும். எல்லா மக்களுக்கு சுதந்திரம், நீதி, பாதுகாப்பு கிடைத்தே தீரும்! இன்ஷா அல்லாஹ்!
சுதந்திர தின அணிவகுப்பிற்கான விளம்பரங்கள் இனிதே துவங்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!