மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் - வன்மையாக கண்டிக்கிறது PFI

சமீபத்தில் கர்நாடகா மாநில பத்திரிக்கைகளில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியது. ஹுன்சூரில் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட குற்றவாளி கே.எஃப்.டி இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும் அந்த இயக்கத்திற்காக வசூல் செய்யும் போது இந்த கொலை நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்த கொலை சம்ப்வம் நிகழ்ந்தவுடன் பாப்புலர் ஃப்ரண்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறது. இந்த கொலையை நிகழ்த்தியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்றும், இந்த குற்றத்தை செய்தவர்கள் எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று காவல்துறையிடம் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொண்டது. இந்த குற்றச்செயலுக்கும் பாப்புலர் ஃப்ரண்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை பாப்புலர் ஃப்ரண்ட் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆனால் மீடியாக்கள் அனைத்தும் கொலை செய்த குற்றவாளி கே.எஃப்.டி. இயக்கத்திற்காக வசூல் செய்யும் போது தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்ததாக ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டே KFD இயக்கம் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்தோடு இணைந்துவிட்டது. KFD என்ற பெயரில் இன்றைக்கு கர்நாடகாவில் எந்த இயக்கமும் செயல்படவில்லை.

இருந்த போதிலும் பாப்புலர் ஃப்ரண்ட் இயக்கத்திற்கு பொருளாதாரம் தனது உறுப்பினர்கள் மாதந்தோறும் கொடுக்கும் சந்தா பணமும், பொதுமக்கள் கொடுக்கும் நன்கொடைகள் மூலமாகவே கிடைக்கிறது.  இன்று பாப்புலர் ஃபரண்ட் மகத்தான் பல பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது.

இளைஞர்களை ஒன்று திரட்டி, போதை பொருளுக்கு எதிராகவும், சூதாட்டத்திற்கு எதிராகவும், கிரிமினல் குற்றத்திற்கு எதிராகவும் போராடி வருகிறது. மேலும் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் என்றைக்கும் வலிமையான மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முஸ்லிம் சமூகத்தை வலிமை அடையச்செய்யவேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டுவருகிறது.

இலியால் முஹம்மது
(மாநில தலைவர்)
பாப்புலர் ஃப்ரண்ட், கர்நாடகம்

Related

SDPI 1155302746162544494

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item