துபையில் EIFF நடத்திய Indian Muslim Empowerment நிகழ்ச்சி


EIFF என்றழைக்கப்படும் எமிரேட்ஸ் இந்தியா பிராடேர்னிட்டி போரம் (Emirates India Fraternity Forum) சமூக அமைப்பு 11.06.09 வியாழக்கிழமை இரவு லேண்ட்மார்க் ஹோட்டலில் ''இந்திய முஸ்லிம்களை சக்திப்படுத்துதல்'' (Indian Muslim Empowerment) என்ற நிகழ்ச்சியை நடத்தியது.விழாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அகில இந்திய அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் யாசிர் ஹசன் (கர்நாடகா) அவர்கள் சிறப்புரையாற்றினார். முன்னதாக EIFF ன் தலைவர் அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் தலைமையுரையாற்றினார். அப்துல் காதர் (கர்நாடகா) அவர்கள் EIFF செய்து வரும் பல்வேறு சமூகநலப் பணிகள் குறித்து தனது அறிமுகவுரையில் குறிப்பிட்டார். யாசிர் ஹசன் அவர்கள் தனது சிறப்புரையில் முஸ்லிம் சமுதாயத்தின் அவல நிலையைக் குறிப்பிட்டார். அதற்கு அவர் சச்சார் கமிட்டி அறிக்கையை மேற்கோள் காட்டினார். 800 வருடங்கள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டார்கள். இந்திய விடுதலைக்கு முஸ்லிம்கள் செய்த தியாகம் ஏட்டில் வடிக்க முடியாதது. இருந்தும் முஸ்லிம்கள் இன்னும் பின்தங்கிய நிலையில்தான் இருக்கிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம்? எப்படி சரி கட்டுவது? தீர்வு என்ன? என்று கேள்வியெழுப்பிய அவர் அதற்கு ஒரு பொது அரசியல் மேடை தேவை என்று குறிப்பிட்டார்.
அடிமட்டத்திலிருந்து அதற்காக வேலை செய்ய வேண்டும். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இந்த வேலையைத்தான் செய்து வருகிறது. அது தனது அரசியல் கட்சியை இன்ஷா அல்லாஹ் வருகிற ஜூலை மாதம் துவக்க இருக்கிறது. அந்த அரசியல் கட்சியின் அறிமுக விழா டெல்லியில் நடைபெறவிருக்கிறது என்று கூறிய அவர், NCHRO என்றழைக்கப்படும் தேசிய மனித உரிமைகள் அமைப்பு, ஆலிம்களின் அமைப்பான இமாம் கவுன்சில், மாணவர் அமைப்பான காம்பஸ் பிரண்ட், பெண்கள் அமைப்பான நேஷனல் விமென்ஸ் பிரண்ட் போன்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் கிளை அமைப்புகளின் பணிகளை விவரித்தார்.
இறுதியாக அப்துல் கனி (தமிழ்நாடு) அவர்கள் நன்றியுரை நவின்றார்.
செய்தியாளர் : பாலைவனத் தூது

Related

pfi 6763009480931586010

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item