இதயத்தில் என்றும் வாழும் இமாம் கொமெய்னி (ரஹ்)
ஆம்! எங்களை மீண்டும் இறை தூதர்களின் பாதைக்கு திருப்பியவர் நீங்கள்தான். பணத்திற்கும், அதிகாரத்திற்கும், ஆயுத பலத்திற்கும் அக்கிரமத்திற்கும் பயப்படாமல் ஏக வல்லவனான அல்லாஹ்வுக்கு மாத்திரம் பயப்படும் படி எங்களை தைரியப் படுத்தியதும் நீங்கள்தான்.
லா இலாஹா இல்லல்லாஹ் என்ற உயரிய கலிமாவின் உண்மையான தாத்பரியத்தை எங்களுக்கு நீங்கள் உணர்த்தினீர்கள். லா இலாஹா எந்த இறைவனும் இல்லை, இல்லல்லாஹ் அல்லாஹ்வைத் தவிர என்று மாத்திரம் நாம் அதை புரிந்து வைத்திருக்க, அல்லாஹ்வைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று நீங்கள் எங்களுக்கு உணர்த்தினீர்கள்.
இஸ்லாம் என்பது எந்த வரையறையாலும் கட்டுப்படுத்தக் கூடாத, கட்டுப்படுத்த முடியாத ஒரு பிணைப்பு என்பதையும் நீங்கள் எங்களுக்கு அறிவித்தீர்கள். உலகில் வாழும் முஸ்லிம்களுக்கு ஒரு துன்பம் அல்லது அநீதீ நேரும் பட்சத்தில் அது தொடர்பாக ஏனைய அனைத்து முஸ்லிம்களும் கவலைக் கொள்ளும் அளவிற்கு நாம் நெருங்கிய பந்தம் உள்ளவர்கள் என்பதை நீங்கள் எங்களுக்கு மீண்டும் நினைவு படுத்தினீர்கள்.
இஸ்லாத்தின் அடிப்படை கோட்பாடான தௌஹீத் மூலம் வலியுறுத்தப்படும் ஏகத்துவம் உம்மத்தின் விடயத்திலும் கருத்தில் கொள்ளப்பட்டு, ஒரே உம்மத்து என்ற அடிப்படையில் நாம் செயலாற்றுவதிலேயே முஸ்லிம்களின் வெற்றியும் கண்ணியமும் உள்ளது என்பதை மீண்டும் எங்களுக்கு எடுத்துக் கூறியவர் நீங்கள்;.
ஏனைய உயிரினங்களுடன் மனித வர்க்கமும் இறைவனின் படைப்பினங்களே என்ற அடிப்படையில் முழு மனித சமுதாயத்தை நோக்க வேண்டிய விதமும் இது தான் என்ற மாபெரும் தத்துவத்தையும் நீங்கள் எங்களுக்கு சுட்டிக் காட்டினீர்கள். இதில் கறுப்பர், வெள்ளையர் என்றோ, மேல் திசையான் கீழ் திசையான் என்றோ வேறுபடுத்திப் பார்க்க கூடாது என்பதையும் நீங்கள் எங்களுக்கு உணர்த்தினீர்கள்.
இன வேற்றுமை, மொழி வேற்றுமை எதையும் பொருட்படுத்தாது முழு மனித சமுதாயத்தினதும் பொதுவான நன்மையை, அவர்கள் நேர் வழி பெறுவதை நாட வேண்டும் என நீங்கள் எங்களுக்குக் கற்றுத் தந்தீர்கள். இதை போன்ற சிறந்த பயிற்சிகள் மூலம், நம்பிக்கை இழந்திருந்த மக்கள் சமுதயாங் களை, ஈரானில் மாத்திரமல்ல, முழு உலகத்திலும் நீங்கள் மீண்டும் தலை நிமிர்ந்து செயற்பட ஊக்குவித்தீர்கள்.
இதனால் நீங்கள் முழு உலகத்திலும் வாழும் மக்களின் ஒரு சொத்தாவீர்கள். மன உறுதியும் வல்லோன் மீது அசையாத நம்பிக்கையும் வைத்த வண்ணம் செலாற்றினால், வல்லரசுகள் புஸ்வாணமாகி விடும் என்ற உண்மையை நீங்கள் செயல் வடிவத்தில் நிரூபித்தீர்கள். இதன் மூலம் ஒரு சாதாரன முஸ்லிமையும் அநீதிக்கு எதிராக வெகுண்டெழும் மாபெரும் வீரனாக்கினீர்கள். மேலும் ஒவ்வொரு முஸ்லிமையும் ஒரு இஸ்லாமிய சிந்தனை வாதியாக மாற்றினீர்கள்.
இவை அனைத்தும் உங்களின் சாதனைகளாக இருக்க, நீங்களோ பணிவுடன் இது என்னுடைய கடமை மட்டுமே என பணிவுடனும் அடக்கத்துடனும் கூறினீர்கள்.
மேலும் இவை அனைத்தும் உங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதன் மூலம் சர்வ வல்லமை பொருந்திய அல்லாஹ் உலகில் செயற்படுத்திய அவனது நாட்டங்கள் என்றும் கூறினீர்கள். அது மட்டுமல்ல. இதே போன்று சத்தியத்திற்காக போராடுவது ஒவ்வொரு உண்மை விசுவாயினதும் கடமை என்றும் சுட்டிக் காட்டினீர்கள்.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து சென்று உண்மையில் 20 ஆண்டுகள் ஆகிவிட்டனவா! உண்மைதான். ஆனால் நீங்கள் எம்மத்தயில் இல்லை என்பதை எங்களால்தான் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. ஏற்க முடியவில்லை. ஏனெனில் நீங்கள் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை முற்றும் முழுவதுமாக எவராலும் நிரப்ப முடியவில்லை. அது என்றென்றும் அவ்வாறே இருக்கும்.
நீங்கள் கொடிய, முற்றிலும் மார்க்க முரணான அநியாய ஆட்சியொன்றில் பல ஆண்டுகளாக சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த ஈரானை அதிலிருந்து மீட்டெடுத்து புரட்சி இஸ்லாமிய ஈரானை செதுக்கிய சிற்பி, இமாம் ஆயாதுல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னீ அவர்கள் பற்றிய உலகின் பெரும்பான்மை யானோரின் உள்ளக் கிளர்ச்சியாகும். பிரிவினையின் ஆற்றாமையை தாங்க முடியாது வெளிப்பட்ட புலம்பலாகும்.
ஒடுக்கப்பட்டவர்களின் தந்தையென அழைக்கப்;பட்டாலும் இமாமவர்களோ தங்களை இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வந்த ஒரு சாதாரண அடிமை என்றே கூறிக் கொண்டார்கள்.
இணை வைத்தல் மீதும் உலகாயுத வஸ்துக்களின் மீதும் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டிருந்த வீணான நம்பிக்கைகளை சுக்கு நூறாக்கவே பிறந்த இமாம் கொமெய்னியவர்கள், 1989ம் ஆண்டு ஜுன் 3ம் திகதி இந்த உலகத்தை விட்டுப் பிரிந்த சென்றார்கள். அதன்போது அவர்கள் சுமார் கால் நூற்றாண்டு காலம் தீய சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்தார்கள். ஆனால் இந்த யுக புருஷர் நம்மை விட்டுப் உடல் அளவில் பிரிந்து சென்று விட்டார் என்ற உண்மையை மக்களால் இன்னும் நம்பத்தான் முடியவில்லை.
எம்முடைய சகல நம்பிக்கைகளையும் நாம் வைத்திருந்த இந்த மாமனிதர் நம்மை விட்டுச் சென்ற பிறகு, அவர்கள் காட்டிச் சென்ற அந்த நேரிய பாதையில் தனியாகத் தொடர்ந்து நடக்க நாம் சக்தி பெற வேண்டுமே! என மக்கள் கவலை கொண்டனர். அது போன்ற சந்தர்ப்பங்களில் இமாமவர்களின் உபதேசங்கள் மக்களுக்கு மனோபலத்தையும் ஆறுதலையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜிஹாத் பின் நப்ஃஸ் எனக் கூறப்படும் தத்தமது மனோ இச்சையுடன் போராடுவது பற்றி இமாமவர்கள் அடிக்கடி வலியுறுத்து வார்கள். யுத்தங்கள் அனைத்திலும் மிகவும் சிரமமானது என நபிகள் (ஸல்) அவர்களால் எச்சரிக்கப்பட்ட இந்த சுய போராட்டம் ஒவ்வொரு விசவாக்கும் இன்றியமையாத தாகும்.
தன்னுடைய தனிப்பட்ட கடமை விடயத்திலும் இமாமவர்கள் மிகவும் பேணுதலாக இருந்தார்கள். தன் அந்திம நேரத்திலும் தொழுகை விடயத்தில் அவர்கள் கண்காணிப்பாகவே இருந்தார்கள்.
தலைவர் இமாம் ஆயாதுல்லாஹ் கொமெய்னீ ஒரு உண்மையான முஸ்லிம் என்ற அடிப்படையில் தன்னுடைய கடமைகளை செய்து விட்டு இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்கள். ஏக வல்லவனான அல்லாஹ் தன்னிடம் உள்ள முடிவில்லாத நற்கூலிகளை அவருக்கு அளித்து அவரை மகிழ்விப்பானாக.
மேலும் இறைவனின் அருளால், இமாமவர்கள் சென்ற பிறகு ஈரானை வழி நடத்த சிறந்த தலைவர்களையும் அவன் தந்த வண்ணமே உள்ளான். அந்தத் தொடரில் தற்பொழுது ஈரான் இஸ்லாமிய புரட்சியின் அதியுயர் தலைவராக செயலாற்றும் ஆயாதுல்லாஹ் செய்யித் அலீ காமனேயீ, தன்னுடைய கடமையை செவ்வனே செய்து வருகின்றார். இது போன்ற தலைவர்களை எமக்கு அல்லாஹ் உலகுள்ள வரைக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.
இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்கள் பற்றி, வஹ்ஹாபிகள் தாறுமாறாகக் கதையளந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், உண்மையை அழகாகவும் நியாயமாகவும் எடுத்துரைத்துள்ள உங்களது சேவையை நான் மிகவும் பாராட்டுகிறேன். 20ம் நூற்றாண்டில் இஸ்லாத்தின் உண்மையான வடிவை மக்களுக்கு இனங்காட்டிய மிகப் பெரிய இஸ்லாமியப் புரட்சியொன்றின் ஸ்தாபகராக விளங்கும் இமாம் அவர்களின் பணி உண்மையான முஸ்லிம்களால் எப்போதும் பாராட்டவும் நன்றி கூறவும் தகுதியானது. உங்களது சேவை தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteநன்றி
//வஹ்ஹாபிகள்// என்று இந்த உலகில் மக்களை பயமுறுத்தியது வழிக் கெட்ட ஷியா மதம் தான் காரணம் ஷியாக்களுக்கு புனித மிக்க மக்கா மதீனாவில் ராஜ்ஜியம் வழங்காததால் ஷியாக்கள் முஸ்லீம்கள் இல்லை இஸ்லாத்தை விட்டும் வெளியில் சென்றவர்கள்
Deleteஅன்பு சகோதர்களே யூதர்கள் என்றும் இஸ்லாத்தின் விரோதி என்பதை நாமறிவோம் ... !
ReplyDeleteஅது எவ்வாறு என்பதை தான் பலர் அறிந்ததில்லை அதன் ஒரு முகம் தான் யூதர்களின் தயாரிப்பில் தோன்றிய ஷியா எனும் வழிக்கெட்ட பிரிவு ... அவர்களை இட்டு முஸ்லீம் சமூகத்துக்கு எச்சரிக்கையூட்டும் விதமாக இக் குழுமம் தயாரிக்கப்பட்டுள்ளது இதில் நீங்களும் இணைந்து கொண்டு உங்கள் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்
(குறிப்பு : இந்த குழுவில் வழிக்கெட்ட ஷியாக்கள் தொடர்ப்பில்லாத எந்த பதிவும் அனுமதிக்கபடமாட்டாது`)
ஜசாகல்லாஹ்
http://www.facebook.com/groups/356484054391251/