மீண்டும் ஈரான் அதிபரானார் நிஜாத் அரண்டு போனது மேற்குலகம்!
http://koothanallurmuslims.blogspot.com/2009/06/blog-post_3772.html
மேற்குலகின் சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் ஈரான் அதிபர் மஹ்மூத் நிஜாத் இரண்டாவது முறையாக அதிபராக மக்களின் அமோக ஆதரவுடன் தொடர்கிறார்.
மூன்றில் இரண்டு பங்கு வாக்குப் பெட்டிகளை கணக்கெடும் பொழுதே அவரது வெற்றி உறுதியானது. 80 சதவீத மொத்த வாக்குப் பதிவில் 65.2 சதவீத வாக்குகளை நிஜாத் பெற்றிருக்கிறார். எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான போட்டியாளர் ஹுசைன் மவ்சவி 31 சதவீத வாக்குகளைப் பெற்றார். மஹ்மூத் அஹ்மது நிஜாத் ஒரு கோடியே 59 லட்சத்து 13 ஆயிரத்து 256 வாக்குகளைப் பெற்றார். பிரதான எதிர்வேட்பாளர் மவ்சவி 46 லட்சம் வாக்குகளைப் பெற்றார்.
52 வயதாகும் அஹ்மது நிஜாத் கடந்த முறை அதிபராவதற்கு முன்பு டெஹ்ரான் மாநகர மேயராக இருந்தவர்.
ஈரான் அதிபராக கடந்த முறை பதவியேற்றதிலிருந்து தனித்துவம் மிகுந்த தனது கொள்கைப் பிரகடனத்தை அரங்கேற்றினார். மூன்றாம் உலக நாடுகளின் உண்மையான பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் உலக தலைவர்களில் ஒருவரானார். ஈரான் தனித்தன்மை, பொருளாதார சுயாட்சி போன்றவற்றை காப்பாற்ற உறுதி பூண்டவர் சிறிதும் தயங்காமல் அரபுலகத்தின் உரிமைகளுக்காகவும் வாதாடத்தொடங்கினார்.
குறிப்பாக இஸ்ரேலின் வல்லாதிக்கத்தை எதிர்த்து போராடிவரும் பாலஸ்தீன விடுதலைப் போராளிகளுக்கும், லெபனானின் ஹிஸ்புல்லாஹ் புரட்சியாளர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் ஆத்மார்த்த நண்பராக விளங்கினார்.
1979லிருந்து தூதரக உறவு முறிக்கப்பட்டிருந்த அமெரிக்காவுடன் உறவை புதுப்பிக்க விரும்பினார். ஆனால் அமெரிக்கா தனது கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்று தன்னை திருத்திக் கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்த மேற்காசிய தலைவர்களில் மஹ்மூது அஹ்மது நிஜாதி முதலிடம் வகிக்கிறார். அமெரிக்க மண்ணிலே ஐநா பெருமன்ற கூட்டத்தில் அமெரிக்காவை விளாசினார்.
மேற்குலகின் கள்ளக்குழந்தையான இஸ்ரேலும் ஈரான் அதிபரின் விமரிசனத்திற்கும் தப்பவில்லை. இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறிவோம் என அறைகூவல் விடுத்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது ஆதரவு நாடுகளோடு இணைந்து ஈரான் அதிபருக்கு எதிரான இயக்கம் ஒன்றை உருவாக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் மஹ்மூத் அஹ்மது நிஜாத் மீது வழக்குகள் தொடரப்பட்டது. இஸ்ரேலுக்கு மட்டுமின்றி இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளுக்குமே சாட்டையடி கொடுக்கும் விதமாக ஈரான் அதிபர் அடுத்து ஒரு கருத்துருவாக்க அதிரடி ஒன்றை ஆரம்பித்தார். இஸ்ரேலை மாய்ந்து ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பலையை மாய்ந்து அதிகப்படுத்தும் விதமாக இருந்தது.
இஸ்ரேலை ஐரோப்பாவுக்கு மாற்று என அடுத்த சாட்டையை சொடுக்கினார். இஸ்ரேலை விழுந்து விழுந்து ஆதரிக்கும் மேற்குலகமே உங்கள் நிலப்பகுதிகளில் உங்கள் செல்ல யூதர்களுக்கு இடஒதுக்கீடு செய்யுங்கள். எங்கள் பாலஸ்தீனர்களின் தாய் மண்ணில் ஏன் இஸ்ரேலியர்களை அநாவசியமாக குடியமர்த்த வேண்டும் என அவர் விடுத்த வினா மேற்குலக ராஜ தந்திரிகளை வாயடைக்கச் செய்தது. ஐரோப்பாவில் யூதர்களை குடியமர்த்துக அல்லது அலாஸ்காவில் இடமாற்றம் செய்க என்றும் அஹ்மது நிஜாத்தின் தொடர் போர்க்குரல் யூத ஆதரவாளர்களுக்கு சர்வதேச அளவில் பின்னடைவைக் கொடுத்த பாலஸ்தீனர்களுக்கு எழும் ஆதரவுக்குரல்கள் அனுதாபத்தை உதிர்க்கும் குரல்களாகவே இருந்து வந்தன. பாலஸ்தீனர்களுக்காக பேசுபவர்கள் கூட இஸ்ரேலிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்துவார்கள் பேச்சுவார்த்தை நடத்துவதில் கூட தவறில்லை தான். ஆனால் பாலஸ்தீனர்கள் விஷயத்தில் இஸ்ரேல் மகா பஞ்சாயத்து செய்ய வேண்டும் என கிட்டத்தட்ட ஒரு சர்வதேச நீதிமன்ற ரேஞ்சுக்கு இஸ்ரேலை நடத்தியவர்களைத்தான் கடந்த 60 ஆண்டுகளாக உலகம் கண்டது. ஆனால் முதன்முறையாக இஸ்ரேலுக்கு பாலஸ்தீனர்களின் சுயாட்சி உரிமை பற்றி பேச எவ்வித அருகதையம் இல்லை. இஸ்ரேல் ஒரு சர்வதேச குற்றவாளிகளின் கூடாரம். ஹோலோகாஸ்ட் என்ற இனஅழிவு ஒரு கட்டுக்கதை என இஸ்ரேல் எந்த கதையை அவிழ்த்து விட்டுக் கொண்டு சர்வதேச அனுதாபத்தை பெற்று வந்தோ அந்தக் கதை கட்டுக்கதை இஸ்ரேலின் மீது அனுதாபம் காட்ட தேவையில்லை. தங்கள் சொந்த நாட்டை பறிகொடுத்த பாலஸ்தீனர்கள்தான் உண்மையில் அனுதாபத்துக்குரியவர்கள் என்பதை பிரச்சார இயக்கமாகவே நடத்திக் காட்டினார்.
ஈரானின் அணு ஆற்றல் ஆய்வு ஈரானின் முன்னாள் அதிபர் மார்க்க அறிஞர் முஹம்மது ஹாத்தமி காலத்திலிருந்தே முன்னற்றத்தின் திசையை நோக்கிச் சென்றாலும் மஹ்மூத் அஹ்மது நிஜாத்தின் கடந்த கால ஆட்சியில் அது உச்சகட்டத்தை எட்டியது.
ஈரானின் யுரேனிய செழுமைப்படுத்தும் திட்டத்திற்கு அமெரிக்க தலைமையிலான நாடுகள் எதிர்ப்பினையும், பொருளாதார தடைகளையும் செயல்படுத்தி வந்த போது ஈரான் அதிபர் தயங்கவில்லை. அணு ஆற்றல் மேம்பாடு ஈரான் மக்களின் லட்சியம் என்றார். அணு ஆய்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்ட ஈரான் மேற்குலகம் மற்றம் சியோனிஷ சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இவற்றுக்கு முக்கிய காரணமாக விளங்கிய அதிபரே மீண்டும் சர்வதேச தலைவராக விஸ்வரூபமெடுத் திருக்கிறார்.இவரது முதல் ஆட்சி காலத்தில் இவரோடு மோதிய ஜார்ஜ் புஷ்ஷுகள், டோனி பிளேர்கள் யஹுத் அல்மர்ட்கள் இப்போது இல்லை.
அமெரிக்கா ஒப்பேறுமா என்ற கவலையில் ஒபாமா ஒவ்வொரு முஸ்லிம் நாட்டின் கதவை தட்டிக் கொண்டு ஸலாம் சொல்லிக் கொண்டு வருகிறார்.
ஈரானின் எதிரிகளும், ஈரான் அதிபரை கடுமையாக விமர்சித்தவர்களும் தற்போது பலம் குன்றி விட்டனர். ஆனால் ஈரான் அதிபரோ மலை உச்சியின் மீது ஒளிவீசும் தீபமாய் மிளிர்கிறார்.