செல்போன் ஒன் நிமிட்.. கவனம்!!!
http://koothanallurmuslims.blogspot.com/2009/06/blog-post_6296.html
அண்மையில் அரபு நாடொன்றில் நடந்த சம்பவம் இது. தனது செல்போனை சார்ச் செய்யப் போட்டுவிட்டு உறங்கப்போன அவருக்கு சிறிது நேரத்தில் சிணுங்கிய செல்போன் எரிச்சலைக் கொடுத்தாலும் எடுத்துக் காதில் வைத்தார். ஆனால் அவர் அதனை சார்ச் செய்வதிலிருந்து கழற்றவில்லை.
சிறிது நேரம்தான் பேசியிருப்பார். திடீரென்று அதிகமாக பாய்ந்த மின்சாரம் அவருக்கு மின்அதிர்வை உண்டுபண்ணியதுடன் செல்போனும் வெடித்து எரியத் தோடங்கிவிட்டது.
எரிந்த படுக்கை
சத்தம் கேட்டு வந்த பெற்றோர் குறைவான இதயத்துடிப்புடன் சுயநினைவற்றுக்கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டது.
கையில் தீக்காயம்
செல்போன் இன்று மிகவும் உபயோகமான சாதனம்தான். ஆனால் அதனால் உயிரைக்கூட எடுக்கமுடியும் பார்த்தீர்களா? ஒருபோதும் சார்ச் செய்யும்போது செல்போனில் பேசாதீர்கள்.
--
அன்புடன்...
முஹம்மது இஸ்ஹாக்
Ishaq KAM