இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்

இந்தியாவைப் பிடித்த சாபக்கேடுகளில் முதல் இடம் பிடிப்பது ஊடகங்கள்...! ஊடக விபச்சாரம் என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் கீழ்கண்ட உண்மை நிகழ்வைக் கண்டு தெளிவு கொள்ளலாம்..!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலும் அதன் சுற்றுபகுதிகளிலும் சில மாதங்களுக்கு முன்பு வீதியில் அலைந்து திரியும் நாய்களின் உடலில் காயங்கள் ஏற்பட்டு இறந்து காணப்பட்டது.

இந்த தெரு நாய்கள் காயம்பட்டு இறந்த நிகழ்வை ஊடகங்கள் எப்படி கொண்டாடி தீர்த்தன என்று தெரிந்து கொண்டால் ஊடகம் என்ற பெயரில் பத்திரிக்கைகள் நடத்தும் எழுத்து விபச்சாரத்தினைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளலாம்.

நாய்களின் உடம்பில் ஏற்பட்ட காயங்கள் வெட்டு காயங்கள் என்றும் இதன் பின்னணியில் தேச விரோத அமைப்புகளுக்குத் தொடர்புகள் இருக்கிறது என்றும் ஆயுத பயிற்சியின் போது நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்டு அவைகள் இறந்திருக்கின்றன என்றும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டது.

காவல் துறை அதிகாரிகளும், உளவுத்துறை அதிகாரிகளும் தந்த தகவலின் அடிப்படையில் என்ற அடிக்கோட்டுடன் செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.(அதாவது பெயர் சொல்லாத விரும்பாத அதிகாரி தெரிவித்ததாவதுனு அடிச்சி உடுவானுங்க பாருங்க அதான் அது)

குறிப்பாக பாப்புலர் ஃபிரண்டை குறிவைத்து ஊடகங்கள் அவதூறு பிரச்சாரங்களை முன்வைத்தது.

நாய்களுக்கு வெட்டு காயங்கள் ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பின்னணியில் இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறது என்பதனை மத்திய உளவுபிரிவு உறுதி செய்து இருக்கிறது என்று ”மாத்ரு பூமி” போன்ற பிரபல பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டு இருந்தன.

அதாவது மனிதர்களை வெட்டிக்கொல்ல நாய்களைக் கொண்டு பயிற்சி எடுக்கிறார்கள் இஸ்லாமியர்கள் என்பதே ஊடகங்கள் சொல்ல வந்த செய்தி...!!!

ஆனால் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி உண்மை நிலையை அறிந்த போது இந்த எழுத்து விபச்சாரர்களின் முகமூடிகள் கிழிந்து தொங்கியது மட்டுமல்லாமல் இந்த ஊடக விபச்சாரர்களின் மேல் காறி துப்பவும் தோன்றுகிறது..

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்கள்...!

மலப்புரம் மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் ஆட்சி துறை பிரிவு டி.எஸ்.பி யும் மக்கள் தகவல் தொடர்பு துறை அதிகாரியுமாகிய ஆர்.பிரதிப் குமார் கூறியதாவது...

* தெரு நாய்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னனியில் தீவிரவாத குழுக்களுக்குத் தொடர்பு இருப்பதாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறாகும். இது குறித்த விசாரணையில் அது பொய் என்று நிரூப்பிக்கப் பட்டுள்ளது.

* பத்திரிக்கைகள் கூறியது போன்று பதினாறு வழக்குகள் பதியப்பட்டு இருப்பதாக கூறப்படுவதும் தவறாகும். வழக்குகள் ஏதும் பதியப்படவில்லை.

* மத்திய - மாநில அரசுகளுக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும், உளவுப்பிரிவு அமைப்புகளுக்கும் காவல் துறை பல்வேறு அறிக்கைகளை சமர்பித்து இருக்கிறது என்று பத்திரிக்கைகள் எழுதி இருந்தன....இது முற்றிலும் தவறாகும்.

இந்நிகழ்வு குறித்து உள்துறை அமைச்சகத்திற்கோ, உளவு பிரிவு அமைப்புகளுக்கோ, நீதிமன்றத்திற்கோ காவல் துறையின் சார்பாக ஒரு அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.

* நாய்களுக்குக் காயம் ஏற்பட்டது கன்னி மாசத்தில் நாய்கள் இன பெருக்கத்திற்காக இணை சேரும் போது நகங்கள் கொண்டு உண்டாகிய காயம் என்று இறந்த நாய்களின் உடல்களைப் பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.

* இது குறித்து குற்றப்பிரிவு காவல்துறை, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அபிலாஷ் தலைமையில் விசாரணை செய்து நாய்கள் காயம் பட்டு இறந்ததன் பின்னணியில் ஒரு மர்மமும் இல்லை என்று உறுதி செய்து இருக்கிறார்கள்.

நாய்களின் உடம்பில் காயம் ஏற்பட்டதை இசுலாமிய தீவிரவாததோடு தொடர்புபடுத்தி எழுதிய பத்திரிக்கைகள்:

http://articles.timesofindia.indiatimes.com/2012-09-20/kozhikode/33976359_1_pet-dog-extremists-police-team

http://defenceforumindia.com/forum/politics-society/42069-killing-dogs-training-method-jihadis.html

http://indiatoday.intoday.in/story/stray-dogs-kerala-malabar-region-extremist-elements/1/228871.html

http://www.youtube.com/watch?v=EwCoc9KFOec


இன்று உண்மை வெளி வந்து இருக்கும் நிலையில் ஒரு பத்திரிக்கையும் செய்தி வெளியிடவில்லை..
தேஜஸ் என்கிற மலையாள பத்திரிக்கை மட்டுமே செய்தி வெளியிட்டு இருக்கிறது.

http://www.thejasnews.com/#9343

##இது தான் இந்திய ஊடக துறைகளின் சனநாயக கடமை ஆற்றும் லட்சணம்...?!

இவிங்களை சொல்லி குத்தமில்லை. இவிங்க பத்திரிக்கைகளையும் காசு கொடுத்து வாங்கி படிக்கிறாங்க பாரு அவிங்களை சொல்லணும்....இந்தியாவைப் பிடித்து உலுக்கும் சாபக்கேடுகளில் முதன்மை இடத்தை பிடிப்பது எழுத்து விபச்சாரம் என்பதனை மெய்பிக்கும் உண்மை நிகழ்வு இது.

Related

முக்கியமானவை 1275919235521993380

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item