மைசூர் வேங்கை ஷஹித் திப்பு சுல்தான் நினைவு கூட்டம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/05/blog-post.html
மைசூர் வேங்கை ஷஹித் திப்பு சுல்தான் அவர்களின் 214 ம் நினைவு ஆண்டு முன்னிட்டு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சிறுவர்களுக்கான விளையாட்டுபோட்டி மற்றும் பொதுக்கூட்டம் நாள் 07/05/2013 அன்று காலை 10.00 மணியளவில் கூத்தாநல்லூர் அல்லிக்கேணி மைதானத்தில் விளையாட்டுபோட்டி நடைபெற்றது.
அன்று மாலை 5.45 மணியளவில் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் எதிரில், மைசூர் வேங்கை ஷஹித் திப்பு சுல்தான் அவர்களின் 214 ம் நினைவு பொதுக்கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் தலைமை வகித்தார், SDPI மாவட்ட தலைவர் M.A.லத்திப், KNR UNITY ஒருங்கிணைப்பாளர் K.J.முஹம்மது அப்துல்லா, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாலர் M.விலாயத் ஹுசைன்,, J.ஹாஜி ஷேக் B.B.A., ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மாநில செயலாளர் S.இலியாஸ் , SDPI மாநில செயற்குழு உறுபினர் சையது இப்ராகிம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.