இலங்கையின் தேசிய ஐக்கிய முன்னணி பொதுச்செயலாளர் அஸத் ஸாலி கைது : PFI கண்டனம்

இலங்கையில் தற்போது சிங்கள பேரினவாத இயக்கங்கள் மேற்கொண்டு வரும் முஸ்லிம் விரோத போக்கை கண்டித்து குரல் எழுப்பி வரும் மிகச் சிலரில் அஸத் ஸாலி முக்கியமானவர்.சிங்கள பேரினவாத இயக்கங்களுக்கு ஆதரவு அளித்து வரும் இலங்கை அரசாங்கம் அஸத் ஸாலியை கைது செய்வதற்கு காய்களை நகர்த்தி வந்தது.தற்போதைய குற்றச்சாட்டை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி நேற்று அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் போது ஜனநாயக வரம்புகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளன.அத்துடன் கடுமையான தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழும் அவரை கைது செய்துள்ளனர்.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸத் ஸாலி உண்ணாவிரதம் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவருடைய உடல் நலத்தையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.இலங்கை அரசின் இந்த எதேச்சதிகார போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடுமையாக கண்டிப்பதுடன் அஸத் ஸாலி அவர்களை உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
ஏ.எஸ்.இஸ்மாயீல்
மாநில தலைவர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு