KNR UNITY மற்றும் CFI இணைந்து நடத்திய மேற்படிப்பு வழிகாட்டி முகாம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/05/knr-unity-cfi.html
கூத்தாநல்லூர்-ல் KNR UNITY மற்றும் கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியா இணைந்து நடத்திய நாமும் சாதிக்கலாம் மேற்படிப்பு வழிகாட்டி நிகழ்ச்சி கூத்தாநல்லூர் செல்வி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் KNR UNITY ஒருங்கிணைப்பாளர் அப்துல்லாஹ் மற்றும் நிஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ரஷித்திய பள்ளிவாசல் இமாம் சிக்கந்தர் ஹஜ்ரத் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். மன்ப உல் உலா பள்ளி தாளாளர் T.M.தமீஜுதீன், பேராசிரியர் ஜாபர் ஹுசைன், ஆக்ஸ்போர்ட் பள்ளி தாளாளர் டாக்டர் J.B.அஸ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கேம்பஸ் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் B.சுபஹதுல்லாஹ் MCA, பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் G.ஜர்ஜீஸ் MBA, Teacher Educator K.ரவிசந்திரன் Msc.B.ed ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியை KNR UNITY உறுப்பினர் தாரிக் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு வந்த அணைத்து மாணவ மாணவிகளுக்கும் "நாமும் சாதிக்கலாம்" புத்தகம் இலவசமாக KNR UNITY சகோதரர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கூத்தாநல்லூர்-ஐ சேர்ந்த மன்ப-உல்-உலா உயர்நிலை பள்ளி, ஆக்ஸ்போர்ட் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை KNR UNITY சகோதரர்கள் ஏற்பாடு செய்தனர்.