UAPA - கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த மக்களின் எழுச்சி

கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது.

யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார். இப்பயணம் நேற்று(மே 30-ஆம் தேதி) திருவனந்தபுரத்தில் நிறைவுற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளம், பல மணிநேரங்கள் கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்தது. சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதி காலவரையற்று சிறைகளில் அடைக்கும் அரசு-அதிகார வர்க்க கூட்டணிக்கு எதிரான பிரம்மாண்ட எதிர்ப்பாக பேரணியும், மாநாடும் அமைந்தது.

மாலை 3.30 மணியளவில் பாளையம் பகுதியில் இருந்து துவங்கிய மக்கள் எழுச்சிப் பேரணி புத்தரிக் கண்டம் மைதானத்தில் நிறைவுற்றது. யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்தை வாபஸ் பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியான பிரகடனத்துடன் கேரள தலைநகரில் திரண்ட மக்கள் வெள்ளம், புதிய வரலாற்றைப் பதிவுச் செய்தது. மாலை 5 மணிக்கு பிரம்மாண்ட கண்டன மாநாடு துவங்கியது. மஃரிப் தொழுகைக்காக 6.45 மணிக்கு இடைவேளை விட்ட வேளையிலும் கூட மக்கள் கூட்டங்கூட்டமாக மாநாட்டு அரங்கிற்குள் வந்து கொண்டிருந்தனர்.

பிஞ்சுக்குழந்தைகள் முதல் வயோதிகர் வரை தாங்களும் இப்போராட்டத்தில் பங்காளர்கள் என்ற முறையில் கலந்து கொண்டது மாநாட்டுக்கும், பேரணிக்கும் மெருகூட்டியது. பெண்களும், இளைஞர்களும், மார்க்க அறிஞர்களும் பெரும் திரளாக ஆவேசத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கண்டன மாநாட்டை ஆல் இந்தியா மில்லி கவுன்சிலின் முன்னாள் தேசிய செயலாளரும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தேசிய தலைவருமான இ.அபூபக்கர் துவக்கி வைத்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை தாங்கினார். பேராசிரியர் எஸ்.ஏ.ஆ.கிலானி (டெல்லி பல்கலைக்கழகம்), ஒ.எம்.அப்துல் ஸலாம் (பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தேசிய பொதுச் செயலாளர்), எ.ஸயீத் (எஸ்.டி.பி.ஐ தேசிய தலைவர்), பேராசிரியர் ஜக்மோகன் சிங் (சுதந்திரப்போராட்ட தியாகி பகத் சிங்கின் சகோதரி மகன்) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.

கறுப்புச் சட்டங்களில் கைதுச் செய்யப்பட்டு அநியாயமாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி மக்களுக்கு கேரள தலைநகரில் நடந்த மாநாடும், பேரணியும் ஆறுதலை தரும்.

Related

முக்கியமானவை 101748059629640172

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item