மலேசியாவில் கருத்தரங்கம் - இஸ்லாத்திற்கெதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்

 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று (16/06/13) "இஸ்லாத்திற்கு எதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கின் ஆரம்பமாக "உஸ்தாத் காரி" முஹம்மத் அப்ராருள் ஹக் அவர்கள் கிராத் ஓதி துவக்கிவைத்தார். சமூக ஆர்வலர் ஜனாப். முஹம்மத் அலி ஜின்னாஹ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

கருத்தரங்கை டத்தோ ஜமருள் கான் அவர்கள் தலைமை தாங்கினார், அவர் தனது உரையில் இந்த தலைப்பின் அவசியத்தையும், மலேசியாவில் வாழும் இந்திய முஸ்லிம்களின் நிலைமையையும் சுட்டிக்காட்டினர். முஸ்லிம் இளைஞர்களுக்கு நிச்சயம் வலுவான கட்டமைபுடன்கூடிய இயக்கம் தேவை என்று கூறினார்.

அதனை தொடர்ந்து ஜனாப். வேங்கை இப்ராஹிம் அவர்கள் அறிமுகவுரையாற்றினார், அவர்  பாப்புலர் ஃபிரண்டின் பணிகளை விரிவாக எடுத்துக்கூறினார். மற்ற இயக்கத்தை காட்டிலும் பாப்புலர் ஃபிரண்ட்  தனித்துவம் பெற்றது ஆகவே பாப்புலர் ஃபிரண்டின் பணிகளுக்கு அணைத்து மக்களும் ஆதவு கொடுக்கவேண்டும் என்று வலியுறித்தினார்.
அடுத்ததாக இஸ்லாத்திற்கு எதிரான சதி என்ற தலைப்பில் சமூக ஆர்வலர் சகோதரர்.தமீம் ஃபைசல் அவர்கள் எழுச்சிவுரை ஆற்றினார். அவர், இஸ்லாத்திற்கு எதிரான சதி என்பது இன்றோ, நேற்றோ நடத்தபடுவது இல்லை, மாறாக இஸ்லாம் தோன்றிய காலத்திலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் அணைத்து சதியையும் முறியடித்து முன்னேறியதே இஸ்லாமிய வரலாறு ஆகவே ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மத்தும் ஒன்றிணைந்து சதியை முறியடிக்க போராடவேண்டும் என்று கூறினார்.
கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்து இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், இந்தியாவில் முஸ்லிம்கள் திட்டமிட்டு பலிகெடாக்கலாக ஆக்கபடுகின்றாகள். இந்தியாவில் நடந்த அணைத்து தீவிரவாத சம்பவத்திற்கும் பின்னணியில் இருப்பது ஹிந்துத்துவா தீவிராதிகள். ஆனால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடுவது அப்பாவி முஸ்லிம்கள்.

இந்தியாவில் அணைத்து துறையிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டு ஓரங்கட்டபடுகிரார்கள். முஸ்லிம்களுக்கு நீதிமன்றங்கள் என்பது அநீதிமன்றங்களாகவே  செயல்படுகின்றன. குறிப்பாக அஃப்சல் குரு வழக்கு, பாபரி மஸ்ஜித் வழக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

(EQUAL RIGHTS FOR ALL) என்ற இந்தியாவின் மிகபெரிய அரசியல் சாசன சட்டம் வெறும் சட்டமாகவே இருக்கின்றதே தவிர செயல்பாட்டில் இல்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சொன்னதைப்போல, இந்தியா பலவித மலர்கள் பூக்கின்ற பூந்தோட்டம் தான் ஆனால் தற்பொழுது அந்த பூந்தோட்டத்தில் நச்சு விதை விதைக்கப்பட்டு அது வளர்ந்து அந்த பூந்தோட்டத்தையே நாசம் செய்துகொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக்கபட்டுள்ளது. ஆகவே முஸ்லிம்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும், நாடு நம்மை பிரித்தாலும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் ஓரணியில் நின்று செயல்படவேண்டும் என்று கூறினார்.
அரங்கத்திலிருந்த அனைத்து மக்களின் மனதிலும் இந்திய முஸ்லிம்களின் நிலையை நினைத்து கவலையும், ஏக்கமும் ஏற்பட்டது, பிறகு பாப்புலர் ஃபிரண்டின் பணியினை ஷாஜஹான் அவர்கள் விரிவாக எடுத்துரைத்த பிறகு மக்களின் மனதில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, டத்தோ. ஹாஜி ஜமருள் கான், "அறம் " அப்துல் சுபுஹான், உஸ்தாத் அப்ராருள் ஹாக், வேங்கை இப்ராஹிம் ஆகியோருக்கு பாப்புலர் ஃபிரண்டின் சார்பாக நினைவு பரிசினை ஷாஜஹான் வழங்கினார். டத்தோ. ஹாஜி ஜமருள் கான் அவர்கள் ஷாஜஹான் அவர்களுக்கு நினைவு பரிசினை வழங்கினார்.




தனது அகவைதான் முதுமை பெற்றுள்ளது ஆனால் தனது சிந்தனையும், சமுதாய பணியினையும் வற்றாத இளமையோடு செயலாற்றி கொண்டிருக்கும் "இஸ்லாமிய நற்பணி மன்ற" நிறுவனர் "அறம்" அப்துல் சுபுஹான் அவர்கள் கருத்தரங்கின் ஆரம்பம் முதல் இறுதிவரை மேடையில் இருந்து ஆதரவு அளித்தார்.







 
இறுதியாக சமூக ஆர்வலர் சகோதரர் அன்சர் அலி அவர்கள் நன்றிவுரை ஆற்றி கருத்தரங்கை நிறைவு செய்தார். இந்த கருத்தரங்கை சகோதரர் முஹம்மத் கனி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.






































Related

முக்கியமானவை 8161217387531689359

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item