இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை - டெல்லியில் SDPI ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை : இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது சர்வதேச விசாரணையை ஐ.நா நடத்த கோரியும், அதற்கான தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வலியுறுத்தியும் SDPI கட்சி டெல்லியில் ஐ.நா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற இறுதி போரில் இலங்கை இராணுவம் இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கொன்றொழித்தது, அதோடு சர்வதேச போர் விதி முறைகளை பல்வேறு விதங்களிலும் இலங்கை அரசும் இலங்கை இராணுவமும் மீறி உள்ளது. பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இறுதி போருக்கு பிறகும் இன்று வரை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் ஜெனிவாவில் ஐக்கிய நாட்டு சபையின் மனித உரிமை கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கையின் இனப்படுகொலைக்கும், மனித உரிமை மீறலுக்கும் எதிராக சர்வேதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. அமெரிக்காவும் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய நாட்டு சபை இலங்கையில் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறலுக்கு எதிராக சர்வேதேச விசாரணை நடத்த வேண்டும். இலங்கைக்கு எதிராக ஐ.ந வின் மனித உரிமை கூட்டத்தில் இந்தியா அதற்காக ஒரு தீர்மானத்தை முன் மொழிய வேண்டும் என வலியுறுத்தி இன்று (7.03.2013) காலை 10.30 மணியளவில் ஐ நா அலுவலகம் முன்பு SDPI ட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சியின் தேசிய பொது செயலாளர் ஹபிஸ் மன்சூர் அலி கான் ,SDPI கட்சியின் தமிழ் மாநில பொது செயலாளர் நெல்லை முபாரக், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில தலைவர் சுஹைப், கேம்பஸ் ஃ ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொது செயலாளர் ரவூப், NCHRO தேசிய செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுப் மற்றும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் ஐ.நா அலுவலகம் முன்பு கூடி ஜெனிவாவில் நடைபெறக்கூடிய மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.

SDPI ­­ கட்சியின் கோரிக்கைகள்

  • இந்தியா இராஜபக்சே அரசுக்கு எதிராக உறுதியான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்
  • மனித உரிமை மீறலுக்கு காரமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்
  • இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன என்பதற்கு போதுமான அனைத்து ஆதரங்களும் உள்ளதால் ராஜபக்சே அரசின் மீது உறுதியான தீர்மானத்தை கொண்டு வர வேண்டும்
  • ராஜபக்சே மற்றும் இனப்படுகொலைக்கு உறுதுணையாக இருந்த அனைவரும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.

Related

முக்கியமானவை 5197962951304472864

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item