மலேசியாவில் பழனிபாபா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் மார்ச் 10 அன்று அகெட் சமூக நல அறக்கட்டளை சார்பாக, ஆவண பட இயக்குனர் ஆளுர் ஷா நவாஸ் எழுதிய சமூகப்புரட்சியாளர் ஷஹீத் பழனி பாபா வாழ்க்கை வரலாற்று நூலை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

சைட் பிஸ்ட்ரோ உணவக விழா அரங்கில் வேங்கை இப்ராஹிம் அவர்களின் தலைமையில் உஸ்தாத் ஹிதாயத்துல்லாஹ் அருசி அவர்கள் கிராஅத் ஓத இனிதே நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் இந்திய முஸ்லிம்கள் (MIM) இயக்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பேசிய NIAT ( National Indian Rights Action Team ) தலைவர் டத்தோ ஹாஜி தஸ்லீம் அவர்கள் மலேசியா-வில் இந்திய முஸ்லிம்கள் வலிமையற்று இருபதையும்,  இதனால் நம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் பற்றி விவரித்தார், மலேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தும் அங்கு முஸ்லிம் சமூகம் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் பிரச்சனைக்கள் ஏராளம் என்றும் HINDRAF ( Hindu Rights Action Force ) போன்ற ஹிந்துத்துவ தீவிரவாத சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி விரிவாக பேசினார், தனது நண்பரான பழனி பாபா தான் தனக்கு முன்மாதிரி என்றும், நம் சமூகத்திற்கு எதிராக மலேசியாவில் நடக்கும் அநியாயங்களுக்கு போராட பல பழனி பாபாக்களை நாம் உருவாக்க வேண்டும் என்றும் பேசினார்.

பின்னர் பேசிய அகெட் சமூக நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுல்தான் அப்துல் காதர் அவர்கள் மலேசியா இந்திய முஸ்லிம்களை பாதுக்கக்க நாம் மலாய் முஸ்லிம்களோடு கை கோர்த்து செல்லவேண்டும் என்றும் பழனி பாபா போலே எதற்கும் துணிந்து போராட வேண்டும் என்றும், மலேசியா ஹிந்துத்துவ வாதிகளால் 100 மில்லியன்களுக்கு மேல்  மலேசியா வெள்ளிகளை நம் இந்திய முஸ்லிம்கள் இழந்திருபதை விளக்கினார். அந்த அளவிற்கு ஹிந்துத்துவ வாதிகள் முஸ்லிம் நிறுவனங்களையும் Money Changer களையும் குறிவைத்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்கள் என்றும் எதிர்த்து போராடியவர்களை சுட்டு கொன்றதையும் விளக்கி பேசினார். மலேசியாவில் உள்ள அணைத்து ஊடகங்களும் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதையும் கூறினார்.

இறுதியாக நூல் வெளியிட்டு எழுச்சி உரை நிகழ்த்திய ஆளுர் ஷா நவாஸ் அவர்கள் பழனி பாபா அவர்கள் தமிழ் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல, உலகளாவிய இந்திய முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த ஆளுமை என்றும், அவர் அனைத்து இஸ்லாமியர்களையும் ஒன்றுபட்டு போராட கூறினார், அவர் கல்வியிலும், பத்திரிக்கை துறையிலும் சிறப்பாக செயல்பட்டவர், அவர் ஒரு தனி மனித ராணுவம் என்றும், அவருடைய வரலாறுகளை பற்றியும் விரிவாக பேசினார், பின்னர் மலேசியா முஸ்லிம்களில் செல்வந்தர்கள் இருந்தும் நாம் இங்கு மீடியா துறையில் பங்காற்றவில்லை என்ற வருத்ததுடன் நமக்கு மீடியா துறை எந்த அளவிற்கு முக்கியம் என்பதையும் தெளிவாக எடுத்து கூறினார், அவருடைய எழுச்சி உரை அனைவரையும் மலேசியாவில் இந்திய முஸ்லிம்கள் மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையை விதைத்துள்ளது.

பழனிபாபாகள் பிறப்பதில்லை, உருவாக்கபடுகிறார்கள்.

Related

முக்கியமானவை 7026121699715088203

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item