முர்ஸியுடன் ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்கள் சந்திப்பு

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் டாக்டர் முஹம்மத் முர்ஸியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தலைமையிலான இஸ்லாமியப் பிரதிநிதிக் குழுவினர் சந்தித்து உரையாடினர். முர்ஸி தங்கியுள்ள ITC மௌரியா ஹோட்டலில் 19.3.13 அன்று மாலை 5 மணிக்கு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியச் செயலாளர் இஜாஸ் அஹ்மத் அஸ்லம், ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மௌலானா அர்ஷத் மதனி, ஜம்இய்யத் அஹ்லே ஹதீஸ் தலைவர்களான அஸ்கர் அலீ, இமாம் மஹ்தி ஆகியோரும் அமீருடன் சென்றிருந்தனர்.

எகிப்தை மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கு ஆதரவு கோரி இந்தியா வந்துள்ள முர்ஸியை இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் உளப்பூர்வமாக வரவேற்பதாக முர்ஸியிடம் தெரிவித்தார் அமீரே ஜமாஅத். எகிப்தில் நடைபெற்ற நிகழ்வுகளை இந்திய முஸ்லிம்கள் மிக ஆவலுடன் கவனித்து வந்தனர் எனவும், ஜனநாயக முறையில் முர்ஸி வெற்றி பெற்று அதிபர் ஆனபோது அதனை இந்திய முஸ்லிம்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் எனவும் முர்ஸியிடம் தெரிவித்தார் அமீரே ஜமாஅத்.

மௌலானா அர்ஷத் மதனி, ஜம்இய்யத்துல் உலமாயே ஹிந்த் நாட்டில் மேற்கொண்டு வருகின்ற கல்விப் பணிகளை அதிபர் முர்ஸியிடம் விவரித்தார். இந்தோனேஷியாவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிக முஸ்லிம்கள் வாழும் நாடு என்ற நிலையில் இந்திய முஸ்லிம்களின் கல்விக்கும் தார்மீகப் பயிற்சிக்கும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அப்போது பேசிய டாக்டர் முர்ஸி முஸ்லிம் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார்

Related

முக்கியமானவை 7181317247640116138

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item