அஜ்மீர் குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதி கைது!

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சார்ந்த தீவிரவாதியை தேசிய புலனாய்வு ஏஜன்சி (NIA) கைதுச் செய்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் மஃபத்லால் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை NIAகைது செய்துள்ளது. இவர் இந்த வாரத்தில் இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்படும் 2-வது ஹிந்துத்துவா தீவிரவாதி ஆவார். இன்று மஃபத்லாலை ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் NIA ஆஜர்படுத்தும்.

2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் மஃபத்லால் முக்கிய பங்கு வகித்துள்ளதாக NIA வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கு தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பவேஷ் பட்டேல் என்ற ஹிந்துத்துவா தீவிரவாதியை NIA கைது செய்திருந்தது. பவேஷ் பட்டேலை ஜெய்ப்பூர் நீதிமன்றம் 15 நாட்கள் NIA கஸ்டடியில் எடுக்க உத்தரவிட்டது.

பட்டேல் மற்றும் மஃபத்லாலை அஜ்மீர் குண்டுவெடிப்பு மற்றும் RSS பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக NIA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில், ஹிந்துக்கள் அஜ்மீர் தர்காவிற்கு வருவதை தடைச் செய்ய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக NIA கண்டுபிடித்துள்ளது.

நேற்று முன் தினம் நொய்டாவில் வைத்து கைது செய்யப்பட்ட பவேஷ் பட்டேல் இதனை NIAவிடம் விசாரணையின் போது தெரிவித்துள்ளான்.இரண்டு குண்டுகள் வைத்ததில் ஒரு குண்டு வெடிக்காதது குறித்தும், மரண எண்ணிக்கை குறைந்தது குறித்தும் கோத்ராவில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மீளாய்வு செய்தனர்.

கேரளாவைச் சார்ந்த ஹிந்துத்துவா தீவிரவாதி சுரேஷ் நாயர், முகேஷ் வாஸ்னிக், மெஹுல், பட்டேல் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இந்த ரகசியக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அஜ்மீர் தர்காவில் வைத்த இரண்டு குண்டுகளில் ஒரு குண்டுவெடிக்காததற்கு காரணம், குண்டை வெடிக்கச் செய்ய டைமராக பயன்படுத்திய சிம்கார்டை காலாவதியானதால் மொபைல் கம்பெனி ரத்துச் செய்துவிட்டது. இதனால் அந்த குண்டு வெடிக்கவில்லை என்று விசாரணையின் போது பவேஷ் பட்டேல் கூறியுள்ளான்.

Related

முக்கியமானவை 1769804760027096689

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item