கஷ்மீரில் யாஸீன் மாலிக் கைது

ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு சென்றிருந்த யாசின் மாலிக், அங்கு ஏழு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்து விட்டு, சனிக்கிழமை நாடு திரும்பினார். தில்லி விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியதும், சிவசேனை கட்சியின் குண்டர்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் இருந்து கஷ்மீர் திரும்பினார். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

யாஸீன் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய உடனேயே, போலீஸார் அவரை கைது செய்தனர். அங்குள்ள அறையில் சிறிது நேரம் வைத்திருந்தனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் விமான நிலைய பின்வாசல் வழியாக, மைசூமாவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு சென்றனர். யாஸீன் மாலிக் காஷ்மீர் திரும்பியதை அடுத்து, பள்ளத்தாக்கில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை போலீஸார் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் கூட்டு மனசாட்சியின் படி அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிட்டு படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கஷ்மீரில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தின் போது, இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

அப்சல் குருவின் உடலை தங்களிடம் ஒப்படைக்கும் வரை, போராட்டத்தை தொடரப் போவதாக கஷ்மீர் அமைப்புகள் அறிவித்துள்ளன.

Related

முக்கியமானவை 3870247008613666798

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item