மியான்மரில் மீண்டும் கலவரம்: 10 பேர் மரணம்
http://koothanallurmuslims.blogspot.com/2013/03/10_23.html
மத்திய மியான்மரில் மீக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த இனக்கலவரத்தில் ஒரு புத்த சன்னியாசி உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இப்பகுதியில் 3 முஸ்லிம் மஸ்ஜிதுகளை வன்முறையாளர்கள் தீக்கிரயாக்கியுள்ளனர். அங்கு தெருக்களில் சடலங்கள் கிடக்கக் காணப்பட்டதாக ஒரு உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
நகரத்தில் ஒரு நகைக்கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கலவரத்தில் முடிந்துள்ளது. 200க்கும் மேற்பட்டவர்கள் நகரத்தில் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதாக போலீஸ் கூறுகிறது. காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தொடர்ந்து இப்பகுதியில் இருந்து ஏராளமானோர் புலன்பெயர்வதாக அல்ஜஸீரா கூறுகிறது.