முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியை முற்றுகையிட்ட TNTJ வினர்!
http://koothanallurmuslims.blogspot.com/2011/10/tntj.html
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிங்களின் உயிரிலும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து வெளியிட்டதை கண்டித்து, மேலும் பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்யக் கோரியும் மேலும் வெளியிட்ட புத்தகத்தை திரும்ப பெற கோரியும் இன்று காலை 10 மணியளவில் மாபெரும் முற்றுகை போராட்டத்தை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.
இதற்கு தொடர்புடைய வர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கோசங்கள் எழுப்பப்பட்டன. பின்பு இதனைத் தொடர்ந்து கண்டன உரை நிகழ்த்திய TNTJ வின் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் ஜனாப். பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள், இறைவனுக்கு இணையாக தாயை ஒப்பிடுவது போல் தனது ஆண்டு மலரில் ஒரு வாசகம் வெளி இட்டது ஏன் என்றும், தங்களின் பள்ளி கூடம் ஓர் இஸ்லாமிய கலாச்சாரமாக திகல்வதனால்தான் தங்களின் குழந்தைகளை அங்கு அனுப்பி கல்வி கற்கவைத்துள்ளோம் என்றும், ஆனால் சிறு வயதிலே அவர்களுக்கு நச்சுக் கருத்தை ஏன் திணிக்கிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கில் நடைபெற்ற இதே தவறுக்கு தாங்களும் அதை எதிர்த்தீர்கள் ஆனால் நீங்களும் ஏன் இந்த தவறை செய்தீர்கள் என்றும், உங்களுக்கு ஒரு நியாயம் அவனுக்கு ஒரு நியாயமா என்றும் இந்த தவறை யாரு செய்தாலும் கடுமையாக தண்டிக்க படவேண்டியது தான் என்றும் அவர் தெருவித்தார். இவ்வுலகிற்கு சிலை வணக்கத்தை ஒழிக்க வந்த முஹம்மது நபி ஸல் அவர்களுக்கே நீங்கள் கருப்பனையான உருவத்தை கொடுத்தல் உலகில் உள்ள எந்த முஸ்லிமும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெருவித்தார்.ஆனால் இந்த புத்தகத்தை திரும்ப பெற வில்லை என்றால் தமிழ் நாடு முழுவதும் TNTJ தனது ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் தெருவித்தார்.
இந்த கூட்டத்தில் TNTJ வின் திருவாரூர் மாவட்ட தலைவர். ஜனாப் அப்துல் ரஹ்மான், TNTJ வின் திருவாரூர் மாவட்ட துணைத் தலைவர் ஜனாப்.முஹம்மது அன்சாரி, ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நாகைப் பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.