கூத்தாநல்லூர்-ல் ம.ம.க தமிமுன் அன்சாரி தீவிர பிரச்சாரம்
http://koothanallurmuslims.blogspot.com/2011/10/blog-post_07.html
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவிக்கு வழக்கறிஞர் பிரபு தாஸ் அவர்கள் வேட்பாளராக நிறுத்த பட்டுள்ளார். 29 வயது நிரம்பிய மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட வழக்கறிஞர் செயலாளராக சிறப்புடன் பணியாற்றி வருகிறார். முஸ்லிம் மற்றும் ஒடுக்க பட்ட மக்களின் நலனுக்காக பணியாற்றுபவர். இவருக்கு தேர்தல் ஆணையம் பேருந்து ( BUS ) சின்னத்தை ஒதுக்கி உள்ளது.
இது போலே ம.ம.க வின் சார்பில் 7 வது வார்டுக்கு M.A ஜெஹபர் அலி அவர்களும், 8 வது வார்டுக்கு K. ரெஜினா பேகம் அவர்களும், 10 வது வார்டுக்கு நாச்சியா அவர்களும், 13 வது வார்டுக்கு K.A நைனஸ் அஹமது அவர்களும், 15 வது வார்டுக்கு S.N. ஆயிஷா பீவி அவர்களும், 16 வது வார்டுக்கு S.B. மன்சூர் அலி அவர்களும், 21 வது வார்டுக்கு ஜம்ஜம் நிஸா அவர்களும், 24 வது வார்டுக்கு P.M.A.சீனி ஜெஹபர் சாதிக் M.A அவர்களும் போட்டியிடுகிறார்கள். ம.ம.க வின் சார்பில் வார்டுகளில் போட்டியிடும் அனைவருக்கும் தென்னை மரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்சிகளின் அரசியலை பார்த்து வெறுத்து போன கூத்தாநல்லூர் மக்கள், மாற்று அரசியலை முன்னிறுத்தி சமுதாயத்திற்காக தனித்து போட்டியிடும் ம.ம.க வேட்பாளருக்கு ஆதரவாக திரும்பி உள்ளனர். கல நிலவரத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபு தாஸ் அவர்கள் முன்னிலையில் இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு ஆதரவு திரட்டும் விதமாக ம.ம.க துணை பொது செயலாளரும் கூத்தாநல்லூர்-க்கு நெருக்கமானவருமான தமிமுன் அன்சாரி அவர்கள் வருகை தந்து ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சமூக ஆர்வலர்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். பெரிய பள்ளி வாசலுக்கு வருகை தந்து ஜமாதார்களையும் சந்தித்து ஆதரவு கேட்டார். மௌலவி மீரான் ஹஜ்ரத் அவர்களையும் சந்தித்து துவா செய்யுமாறும் ஆதரவு தருமாறும் கேட்டு கொண்டார்.
நமது நிருபர்
கூத்தாநல்லூர்