கூத்தநல்லூர் இளைஞர் இயக்கம் நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம் அனைவரும் அறிந்ததே. கொள்கை ரீதியாக பிரிந்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பொது கூட்டம் நடத்த பட்டது. இதில் சிறப்பு பேச்சாளர்களாக மாநில துணை செயலாளர் M. தமீமுல் அன்சாரி அவர்களும், SDPI மாநில செயலாளர் A அபூபக்கர் சித்திக் அவர்களும் TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர் Dr M. முஹம்மது சர்வத் கான் அவர்களும் கலந்து கொண்டு சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளில் இருந்தும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
TNTJ-வும் ஆதரவு அளித்தது, சர்வத் கான்-ஐ கலந்து கொள்ள சொன்ன TNTJ மாநில நிர்வாகம், நிகழ்ச்சியின் முதல் நாளன்று மாநில பொறுப்பாளர் தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கத்தினருக்கு வாழ்த்து மட்டும் சொல்லி விட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு TNTJ வின் அனுமதி மறுக்கப்பட்டதன் பெயரில் அவர்களின் உண்மையான முகத்தை அறிந்துகொண்ட பின் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பிறகு தாங்கள் தான் ஏதோ நீக்கிவிட்டது போல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தனிமனிதனின் மானம் பற்றி நபி ( ஸல் ) அவர்கள் பல இடங்களில் கூறியுள்ளார்கள்.
இஸ்லாமிய சமுதாய நலனுக்காக நடைபெற்ற சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் SDPI மற்றும் TMMK நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஒற்றுமையை வலியுறுத்தி பேசிய ஒரே காரணத்திற்காக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் Dr சர்வத் கான் அவர்களை TNTJ லிருந்து நீக்கிவிட்டோம் என்று கூறி வருகிறது. நிகழ்ச்சிக்கு முன்பு ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த TNTJ நிகழ்ச்சிக்கு பின்பு நீக்கிவிட்டது ஏன்? என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். TNTJ குர்ஆன் ஹதிஸை ஏற்று செயல்படுகின்றோம் என்று சொல்லி விட்டு பொதுவான ஒரு விசயத்திற்கு சென்று வந்த மாநில பொறுப்பாளரை பைலாவின் அடிபடையில் நீக்குவது சரியானது அல்ல என்பதே அனைத்து மக்களின் கருத்தாக உள்ளது. சமுதாய ஒற்றுமை TNTJ பொறுத்தவரை கூடாது என்பது சமுதாய மக்களின் கருத்தாகும். இக்கடிதம் ஓட்டுமொத்த TNTJ வினரை குறை கூறும் வகையில் எழுத பட்டது அல்ல. மாறாக சமுதாய ஒற்றுமைக்கு இடையுறு செய்யும் வகையில் செயல்படும் ஒரு சிலருக்கு மட்டுமே.
சமுதாய பாதுகாவலர் என்று கூறி கொள்வோரின் செயல் இது தானா? அல்லாஹுவும் , ரசூல் மட்டும் தான் மார்க்கம் என்று கொள்கை பிரச்சாரம் செய்பவர்கள், எந்த வகையில் அதை பின்பற்றுகிறார்கள். ஒற்றுமை என்னும் கையிற்றை வலுவாக பற்றிகொள்ளுங்கள் என்னும் இறை வசனத்துக்கு மாறாக அல்லவா இச்செயல் உள்ளது.
அல்லாஹ்விற்காக இது போன்ற செயல்களை மாற்றிக்கொண்டு இஸ்லாமிய சமுதாயம் ஒன்றிணைந்து முன்னேற தாங்களும் முன் வந்து ஒத்துழைப்பு தருமாறு கூத்தநல்லூர் இளைஞர் இயக்கம் சார்பாக அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
தலைமை குழு
கூத்தாநல்லூர் இளைஞர் இயக்கம்
ungalin(KYA) ootrumai kosam unmaiya enabathil tharpothu pothu makkaluku santhakam vanthullathu?ootrumai pattri pesubavatgal matra jamath-niar patri pesa vendiya avasiyam enna irkukirathu?
ReplyDelete(ஒற்றுமை என்னும் கையிற்றை வலுவாக பற்றிகொள்ளுங்கள் என்னும் நபி மொழிக்கு மாறாக அல்லவா இச்செயல் உள்ளது.)
ReplyDeleteஇந்த நபி மொழி எந்த ஹதீஸ் புக் இல் இருக்கிறது . கொஞ்சம் காட்ட முடியுமா ?
சகோதரர்களே ..
உங்கள் ஊரில் சுமார் 50 60 ஆண்டுகள் முன்பு வந்த நமது இஸ்லாமியர்களை உங்கள் ஜமாத்தில்இணக்கத்து ஏன்? இதற்க்கு சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டம்? சமுதாய பாதுகாவலர் என்று கூறி கொள்வோரின் செயல் இது தானா?ஒற்றுமை என்னும் கையிற்றை வலுவாக பற்றிகொள்ளுங்கள் என்னும் நபி மொழிக்கு மாறாக அல்லவா இச்செயல் உள்ளதுசிந்திப்பம் ஒன்ருபடுவம்
ReplyDelete