துனீசியா இடைக்கால அரசுக்கு அந்நஹ்ழா தலைமை வகிக்கும்

அரபுலகில் ஜனநாயக புரட்சிக்கு வித்திட்ட துனீசியாவில் நடந்த முதல் தேர்தலில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா வெற்றிப்பெற்றுள்ளது. 217 உறுப்பினர்களைக்கொண்ட இடைக்கால பாராளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளதாக அந்நஹ்ழாவின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று ஏகாதிபத்திய அரசின் காலத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தடைச்செய்யப்பட்டு கொடூரமான அடக்குமுறைக்கு ஆளான அந்நஹ்ழா வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

அந்நஹ்ழா என்றால் எழுச்சி அல்லது மறுமலர்ச்சி எனப்பொருளாகும்.

15 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ள இடதுசாரி கட்சிகளான இத்திஹாத்துல் கட்சியும், காங்கிரஸ் ஃபார் தி ரிபப்ளிக் கட்சியும் அடுத்த இடங்களை பிடித்துள்ளன. அந்நஹ்ழாவின் முக்கிய எதிர்கட்சியான ப்ரோக்ரஸிவ் டெமோக்ரேடிக் கட்சி நல்ல போட்டியை கொடுக்கும் என எதிர்பார்த்தபொழுதிலும் நான்காவது இடத்திற்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.

தேசிய அளவிலும், மாவட்ட அளவிலும் இஸ்லாமிய கட்சிதான் முதல் இடத்தை பிடித்துள்ளது என அந்நஹ்ழாவின் தேர்தல் மேலாளர் அப்துல் ஹமீத் ஜலஸி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தலுக்கு முன்னால் நடந்த 18 வெளிநாடு வாழ் துனீசிய மக்களுக்கான தொகுதிகளுக்கான தேர்தலில் அந்நஹ்ழா ஒன்பது இடங்களை கைப்பற்றியது.நான்கு இடங்களை இத்திஹாத்துலும், மூன்றை காங்கிரஸும் கைப்பற்றின.

ஜனநாயக புரட்சியின் அந்தஸ்தை பாதுகாப்பதும், ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் உறுதுச்செய்வதுதான் தங்களின் லட்சியம் என அந்நஹ்ழா செய்தித்தொடர்பாளர் ஸெய்து ஃபர்ஜானி தெரிவித்துள்ளார்.விசாலமான தேசிய ஐக்கிய அரசை உருவாக்குவதுதான் தங்களின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

புரட்சிக்கு பிந்தைய துனீசியாவிற்கு புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கும் தற்காலிக அரசை உருவாக்குவதற்குமான இடைக்கால அரசில் அந்நஹ்ழா-காங்கிரஸ் கூட்டணி தலைமை வகிக்கும் என கருதப்படுகிறது. அந்நஹ்ழாவுடன் கூட்டணிக்கு தயார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் முனஸ்ஸிஃப் மர்சூகி தெரிவித்துள்ளார்.

ஜனநாயக புரட்சியை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஜைனுல் ஆபிதீன் பின் அலியால் நாடுகடத்தப்பட்ட அந்நஹ்ழாவின் தலைவர் ராஷித் அல் கன்னோஷி துனீசியாவிற்கு திரும்பி வந்தபொழுதிலும் நாட்டின் தலைமைப்பதவியை இளைஞர்கள்தான் வகிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இஸ்லாமிய கட்சி ஆட்சிக்கு வருவதை தடுக்க வலதுசாரி பத்திரிகைகளும், கட்சிகளும் நடத்திய பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்து அந்நஹ்ழா சிறந்த வெற்றியை பெற்றுள்ளது.

Related

Tunisia 1196455378137343158

Post a Comment

  1. assalamu alaikkum varah bro...can u add this blog to ur blooger list...bcoz this is full islamic update only bro...and our current ummah uprising news also bro...

    http://islamicuprising.blogspot.com/

    ReplyDelete

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item