லிபிய அதிபர் கடாபி புரட்சிப் படையினரால் சுட்டுக் கொலை?

கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி புரிந்துள்ளார். சமீபத்தில் இவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் மறைமுக ஆதரவோடு நடந்த இந்தப் புரட்சிப் படையினர் பல நகர்களைப் பிடித்தனர்.
ஆனால், கடாபி லிபியாவிலேயே தலைமறைவாக இருந்தார். அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் புரட்சிப் படை கடாபியின் சொந்த ஊரான சிர்டேவை இன்று கைப்பற்றியது.
அங்கு ஒரு பதுங்குக் குழியில் மறைந்திருந்த கடாபியை புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளது.