ஷஹித் பழனி பாபா அவர்களின் கனவு நனவானது - SDPI

SDPI-ன் சார்பாக சென்னை மேயராக போட்டியிடும் வேட்பாளர் அமீர் ஹம்சாவை ஆதரித்து நேற்றைய தினம் சென்னை மண்ணடி தம்புச்செட்டித்தெருவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சமுதாயத்தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினர்.
மக்கள் ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் SDPI மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் SDPI சார்பாக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
முதன் முதலாக சிறுபான்மை முஸ்லிம்களும், தலித் சமூகமும் ஒன்றினைந்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறது. இக்கூட்டணியில் சென்னை மாநகராட்சி மேயராக SDPI வட சென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்சா போட்டியிடுகிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுதியுள்ள இக்கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் மிக வேகமாக சென்னை மாநகரம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சென்னை மண்ணடியில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்திற்கு SDPI-ன் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, எஸ்.டி.பி.ஐயின் மாநில பொதுச்செயலாளர் ரஃபீக் அஹமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனின் தனிச் செயலாளர் இளஞ்சேகுவாரா, சென்னை மாவட்ட தலைவர் பாலாஜி, முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் தலைவர் ஹனீஃபா, ஆகியோர்  சிறப்புரையாற்றினார்கள்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட SDPI-ன் தேசிய செயற்குழு உறுப்பினர் கர்நாடகாவைச்சேர்ந்த டாக்டர் ஆவா ஷரீஃப் அவர்கள் உருது மற்றும் தமிழில் உரை நிகழ்த்தினார். அதில் கர்நாடகா மாநிலத்தில் SDPI-யினர்
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பெங்களூர் நகரத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர், அதே போல் சென்னையிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் இரண்டே ஆண்டுகளில் சென்னை சிறப்பான ஒரு நகரமாக மாற்றிவிடுவோம் என்று கூறினார்.

இறுதியாக உரை நிகழ்த்திய SDPI-ன் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி அவர்கள் உரையாற்றும் பொழுது தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளும் முஸ்லிம் மற்றும் தலித் சமூகத்திற்கு இழைத்த துரோகத்தைப் பற்றி விளக்கினார். அவர்களுடைய நயவஞ்சகத்தனத்தை அறிந்து கொள்ளாத சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும், ஒன்று இரண்டு சீட்டுகளுக்காக அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதும், சமூகத்தின் ஓட்டுகளை அவர்களுக்காக பெற்றுக்கொடுத்து வெற்றியடையச்செய்து விட்டு, அவர்கள் செய்யும் தவறுகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருந்து வருவதையும் சுட்டிக்காட்டி உரை நிகழ்த்தினார்.

ஷஹீது பழனி பாபா பற்றி கூறும் போது, பழனி பாபா அவர்கள் முஸ்லிம் சமூகமும், தலித் சமூகமும் இணைந்து அரசியல் சக்தி பெற வேண்டும் என்று கனவு கண்டார். அவரது கனவு இன்று நனவாகிவிட்டதும், தேர்தலுக்கு மட்டுமல்லாமல் எல்லா நேரங்களில் இந்த கூட்டணி தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆன நிலையில் SDPI பிற அரசியல் கட்சிகளால் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகி வருவதை சு‌‌ட்டிக்காட்டினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் தனித்து போட்டியிடுவது என முடிவெடுத்தபோது சமூக இயக்கங்கள் மத்தியிலும், பிற அரசியல் கட்சிகள் சார்பிலும் விமர்சனங்கள் அதிக அளவில் எழுந்ததை சுட்டிக்காட்டினார். அத்தோடு மட்டுமல்லாமல் எந்த இஸ்லாமிய இயக்கமும் SDPI-யிற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது SDPI யின் செயல்பாடுகள் அவர்களுக்கு தெரிய வந்த பிறகு இன்று நமக்காக 13 இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்கு ஆதரவளித்திருப்பதை சுட்டிக்காட்டினார்.


சமூகத்திற்கு நன்மை செய்வதற்காகவே SDPI கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்றும், பணம் சம்பாதிப்பதற்காக அல்ல, எனவே சமூக மக்கள் அனைவரும் SDPI-ன் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற்றச்செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இறுதியாக SDPI-ன் பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அவர்கள் நன்றியுரை ஆற்ற பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.


Chennai Popular Front

Related

tiruma 5569101645987544980

Post a Comment

emo-but-icon

Follow Us

Follow

Hot News

Recent

Archive

LOGO

E-mail

செய்திகளை இ-மெயிலில் பெற இ-மெயில் முகவரியை கொடுக்கவும்

Koothanallur Muslims

Mobile App

Connect Us

item